பக்கம்:பூநாகம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 71

'ஏய். தங்கத்துரை, ஒன்ன என் கையாலேயே போலி சுல ஒப்படைக்கிறேனா இல்லையான்னு பாரு, என்னடா நினைச்சுக்கிட்டே."

ராமசாமி, சொன்னதைச் செய்யப் போகிறவர் போல் நடக்கப் போனபோது, குடித்தனக்காரிகளில் ஒருத்தியான மல்லிகா சிரிக்க, வீட்டுக்கார அம்மா வேணாம் சார், வேணாம் சார்?’ என்றாள். எவளோ ஒருத்தி தன்னைப் பொருட்படுத்தி விட்டாள் என்கிற மகிழ்ச்சியில், ராமசாமி நின்ற இடத்திலேயே நின்றார். கீழே இருந்த வீட்டுக்கார அம்மா, கமலசுந்தரிக்கு முன்பு வாடகைக்கு இருந்த ஒருத் தியை அரிவாள் மணையால் வெட்டி, விவகாரம் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஆயிரம் ரூபாய் மாமூலோடும், அரக்கி, அடங்காபிடாரி' என்ற அர்ச்சனைகளோடும் முடிந் தது. இப்போது அங்கே போனால், வீட்டுக்கார அம்மா தெருக்காரியாக ஆகவேண்டி வரும்.

அப்போதுதான், அண்ணன்' ராமசாமி அங்கே நிற் பதை பார்த்தது போல், தங்கத்துரை விக்கல்களைக் கக்கிய படியே அவரை உற்றுப் பார்த்தான். பிறகு அவர் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான். ஒங்களுக்குக் கொடுத்த வாக்க மீறிட்டேன்ே, மீறிட்டேனே' என்று அவர் பாதத்தில் தலையை போட்டு அங்குமிங்குமாய் ஆட்டினான். இப்படி, அவன் தன்னை ஒரு முன்னாள அரிச்சந்திரனாக பாவித்துக் கொண்டபோது, ராமசாமி விசுவாமித்திரர் ஆனார். நீ ஆயிரம் சொன்னாலும் ஒன்ன மெட்ராசுல் வைக்கப் போற துல்ல, கடையையும் ஒன்ன நடத்த விடமாட்டேன்’ என்று கத்தினார்.

தங்கத்துரை தலையை நிமிர்த்தி ராமசாமியை கூச்சத் தோடு பார்த்தான். பிறகு அவர் காலிலேயே தனது தலையை வைத்து இடித்தான். அய்யோ. அய்யோ- என்று அரற்றி னான். அவனை முன்பெல்லாம் நாயி, அதுவும் சொரி நாயி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/80&oldid=600538" இலிருந்து மீள்விக்கப்பட்டது