பக்கம்:பூநாகம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 73

இனிமேல் இத குடிக்க விடாமப் பார்த்துக்கிறது என்னோட பொறுப்பு. சரி. வீட்ல வந்து காப்பி சாப்பிட்டுட்டுப் பேரங்க.’’

வேண்டாம்மா, ஒன் புருஷன் மிச்சம் மீதி சரக்கு வச்சி ருப்பான் அத. நீயே எனக்குத் தந்தாலும் தருவ...'

'எய்தவள் நான் இருக்கும்போது அம்பைப் போய் நோகlங்களே. அதை’’ குடிக்கச் சொன்னதும் நான் தான். குடிக்க வெச்சதும் நான்தான். ஒருத்தர் குடிச்சால் குடிக்கிற அந்தக் காரியத்தை மட்டும் பார்க்கக்கூடாது - அதற்கான காரணத்தையும் கண்டு பிடிக்கனும். இதுக்கு மேலேயும் நீங்க விரட்டுறதா இருந்தால் என்னைத்தான் விரட்டனும். அந்த வீட்டுக்கார ராட்சசியைப் பற்றி உங்க ளுக்கு என்ன தெரியும்.’’

ராமசாமி பதிலுக்கு கோபமாக பேசப்போனார். ஆனால், அவரையும் மீறி சிரிப்பு வந்தது. மகளாய் வளர்த்த மைத் துனியின் முதுகை தடவிக் கொடுத்தபடியே, வீட்டை, நோக்கி நடந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/82&oldid=600540" இலிருந்து மீள்விக்கப்பட்டது