பக்கம்:பூநாகம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 75

சேலையை இழுத்து முடினால் சரியாப் போயிடும். இழுத்துத் தான் மூடனும்’ என்றாள்.

பவானி புடவையை ஜாக்கெட் போடாதவள் போல, இழுத்து மூடிக் கொண்டாள். அண்ணிக்காரி இப்போதுதான் கண்ணில் காட்டும் பவுடரை பூசிக்கொண்டாள்

'மாப்பிள்ளை பையன் சினிமாக்காரின் னு ஓடிப் போறதுக்கா? இவ்வளவு போதும். காதுல விழுகிற முடியை ஒதுக்கணும் - கன்னத்தை உப்பி உப்பி பார்க்கப்படாது. காபி கொடுத்தமா வந்தமான்னு வரணும். இங்கே நின்னு அவனை உற்றுப் பார்க்கறது மாதிரி அங்கேயும் பார்க்கப்படாது. மாப்பிள்ளை பொண்ணைப் பார்க்கற ஏற்பாடே தவிர. பொண்ணு மாப்பிள்ளையை பார்க்கிறதுக்காக இல்ல. எனக்கும் கொஞ்சம் பூம் .ெ டுக்கறது" கொடுக்கிற குடும்பத் துப் பொண்ணுக்குத்தானே இதெல்லாம் தெரியும்...”

மகிழ்ச்சியான எதிர்பார்ப்பில் அல்லாடிய பவானி, தலை யில் வைத்த மல்லிகைப் பூவை ஒட்டு மொத்தமாக அண்ணி யிடம் நீட்டிவிட்டு, கையறு நிலையில் தவித்தாள். அந்தத் தவிப்பு தாங்கமாட்டாது அண்ணியிடமே ஆறுதல் தேடுபவள் போல் பார்த்தாள். வெளியறையில் அண்ணனின் கலகலப் பான சத்தம்.

'ஏதோ என் சக்திக்கு ஏற்ப என் ஸிஸ்டருக்கு கண்டிப்பா சேய்வேன் ??

என்ன உளறுறாரு . உளறத் தெரியாமல். யாருகிட்ட சக்தி இருக்கு... சிவமேன்னு பேசாமல் இருக்காமல், இந்த மனுஷனுக்கு இந்தப் பேச்செல்லாம் எதுக்கு...??

'எங்களுக்குப் பொண்ணு நல்லா இருக்கணும். குடும்பத் துக்கு அடக்கமாய் இருக்கணும். அதுவும் முக் யமுன்னு சொல்லல. அது மட்டும்தான் முக்கியமுன்னு சொல்ல வாறேன்!??

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/84&oldid=600542" இலிருந்து மீள்விக்கப்பட்டது