பக்கம்:பூநாகம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 77

யாணம் ஆகி இந்த வீட்டை விட்டுப் போகும்போது ரெண்டு கேள்வியாவது கேட்டுட்டுப் போறேன்.”

பவானியின் அலங்காரம் கால்மணி நேரத்திற்குள் முடிந் தது. அண்ணி திட்ட முடியாத அலங்காரம். இந்த பத் தாண்டு காலத்தில், இன்றைக்கு மட்டுமே உடம்பைச் சுற்றிப் பட்டுப் புடவை, இன்றைக்கு மட்டுமே கொண்டை சுமக்கிற அளவுக்கு பூ மொந்தை...

$: 率

சதாசிவம் ஒரு ஒழுங்குப் பிரச்னையைக் கிளப்பினார்.

‘எப்படியோ அப்பாவைப் பற்றிச் சொல்லிட்டேன். இப்போ அவரையும் இங்கே உட்கார வைக்கனுமே... என்ன சொல்றே...???

  • தத்துப் பித்துன்னு உளறிப்புட்டு என்கிட்டே வந்து பின் யோசனை கேட்டால் எப்படி? படுத்த படுக்கையாய் கிடக்கிறவரை மியூஸியத்தில் காட்டுறது மாதிரி காட்டணு மாக்கும். அவங்க அபசகுனமாய் நெனைச்சு ஒடனுமாக் கும்.’’

'அதுக்கில்ல. அவரும் மாப்பிள்ளையை ஒரு தடவை பார்த்தால் நல்லது. பெண்ணைப் பெற்றவராச்சே.???

'அதுதான் அதிர்ஷ்டம் இருந்தால் மணவறையில் பார்த்துக்கலாமே...???

'சரி, ஒன் கிட்டே சண்டை போட எனக்கு நேரமில்ல. இந்த ஸ்வீட்லை எடுத்துக்கிட்டு வா. பவானி, கடைசியில் காபித் தட்டோட வந்தால் போதும்.’’

திருவும் திருமதியுமான சதாசிவங்கள், ஒரு பெரிய டிரே யில் ஸ்வீட் தட்டுகளையும் மிக்ஸர் தட்டுகளையும் சேர்ந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/86&oldid=600544" இலிருந்து மீள்விக்கப்பட்டது