பக்கம்:பூநாகம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாயாகிப் போன மகள் 78

தாற்போல் எடுத்துக்கொண்டு சமையலறையைத் தாண்டிய போது, அவர்கள் பெற்றுப் போட்ட இரண்டு செல்வங்கள், பெற்றோரை வழிமறித்து, ஒரு தட்டைக் கீழே வீழ்த்தி புதிய புறநானூற்றைப் படித்துக் கொண்டிருந்தபோது

அப்போதுதான் அப்பா ஞாபகம் வந்ததற்காக, பவானி சங்கடப்பட்டாள். அதற்காக தன்னைத் தானே தண்டிப்பு பவள் போல், தலையில் அடித்துக் கொண்டாள். அப்பாவை அப்போதே பார்த்து பிராயச்சித்தம் செய்யத் துடித்தவள்ாய், கொல்லைப்புறத்திற்குப் போகும வழியில் இருந்த ஒரு சிற்றறைக்குள் போனாள். ஒரு காலத்தில் இது அப்பாவின் பூஜையறை. இன்னும்கூட ஒரு திட்டில் சில சாமி படங்கள் இருந்தன. அப்பா மெத்தையில்லாத ஒரு டேப் கட்டிலில் மல்லாந்து கிடந்தார். கண்களில் கொசு மொய்த்தன. அவற்றை விரட்டி விரட்டி அடித்து களைத்தவர் போல், இரண்டு கைகளையும் மார்பில் போட்டிருந்தார்.

பவானி, பெண் பார்க்கும் படலம் நடக்கப் போகிறது என்ற நினைப்பையும் மீறி பிள்ளை போல் கிடந்த பெற்ற வரை தாய்போல் தவிதவித்துப் பார்த்தாள். அண்ணனை யும தன்னையும் இடுப்புக்கு ஒன்றாக வைத்துக்கொண்டு ராட்டினம் சுற்றியவர். இப்போது அச்சறுந்து குப்புறக் கிடக் கும் குடை ராட்டினம் போல் கிடப்பதைப் பதைபதைத்துப் பார்த்தாள். பத்தாண்டுகளுக்கு முன்பு ரிடையரானவர். 'ஒங்களுக்கா ஜம்பத்தெட்டு. நம்ப முடியாத உண்மை’ என்று பிரிவு விழாவில் பேசியவர்கள் எல்லாம் பெரிசாய்ப் பேசினார்கள். மனதைப் போல் வைரப்பட்ட உடம்பு.

எலும்பும் சதையும் ஒன்றாகி, இறுகிப் போயிருந்த அந்த உடம்புக்கு இருககும் இதயத்திற்கும் ஒரு அட்டாக வந்து விட்டது அதுவும் போல மாதம், நீரிழிவு இல்லை. ரத்த அழுத்தம் இல்லை. அப்படியும் பயங்கரமான தாக்குதல். அவரை நடமாட விடாமல் செய்துவிட்டன. லேசாய் எழுந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/87&oldid=600545" இலிருந்து மீள்விக்கப்பட்டது