பக்கம்:பூநாகம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 79

கட்டிலில் உட்கார்ந்து சாயலாம். அதுவும் உரிய நேரத்தில் உரிய மருந்தைக் கொடுத்தால்...

பவானி, வெட்கத்தையும் மீறி எதையோ சொல்லத் துடி துடித்தாள். எப்பா, எப்பா’’ என்றுகூட பேசிவிட்டாள். ஆனால் கட்டிலோடு கட்டிலாய் அதன் இற்றுப்போன சட்டம் போல் கிடந்த அந்த மனிதர், தனக்கு எல்லாம் தெரியும் என்பதுபோல், கையைத் தூக்கி, விரல்களைச் சேர்ந்தாற். போல் குவித்தபோது, பவானி அவர் பாதங்களில் முகம் போட்டாள். அவர் பெருவிரல் தூசியையே திலகமாக்கித் கொண்டாள். அப்போது

அண்ணிக்காரி ஓடிவந்தாள். 'அம்மாவுக்கு கல்யாணம் செய்துக்கிற நெனப்பு இல்லையா. பொண்ண வரச்சொல் லுங்கன்னு சொல்றது கேட்கலியா?” என்று பல இல்லியா’க் களைப் போட்டபோது, இல்லை இல்லை என்பது போல் பவானி சமையலறைக்குள் போய், டிசைன்போட்ட பக்கத்து வீட்டு டிரேயை நீட்ட, அண்ணி காபி டம்ளர்களை அதில் வைத்தாள்.

தயங்கி நின்ற பவானி, பிறகு யந்திரமாய் நடந்தாள். ஏதோ பணிப்பெண் போல் எல்லோருக்கும் காபி டம்ளரை நீட்டினாள். மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டும் என்ற பேரவா எழவில்லை எவனோ ஒருத்தன். நல்லவனோ கெட்டவனோ. கிடைத்தால் போதும். இந்த நரகத்தில் இருந்து விடுபட்டால் போதும்.

× 豪 摯

பவானி ஒவ்வொருவர் முன்னாலும் சற்றே குனிந்து, டிரே யுடன் நின்றாள். பின்னர்-நாணப்படாமல், நளினப் படாமல், சிற்றுண்டி விடுதி சேவகர் போல், மட மடவென்று நடந்து சமையலறைப் பக்கம் வந்து நின்று கொண்டாள். அம்மா இல்லாக் குறையை அழுது தீர்த்தாள். அப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/88&oldid=600546" இலிருந்து மீள்விக்கப்பட்டது