பக்கம்:பூநாகம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தாயாகிப் போன மகள்

மாப்பிள்ளைக்குப் பெண்ணை பிடித்துவிட்டது போலும். அப்பாவிடம் எதையோ சொல்ல, அவர் ஆனந்தக்கூத்தாய் சொன்னார்.

எேன் மகனுக்குப் பெண்ணை ரொம்பப் பிடிச்சிருக்கு .. மிலிடேரிக்காரன் பாருங்க... சட்டுப் புட்டுன்னு சொல்லிட் டான அவனுக்கு லீவு முடியப் போகுது..அதனால அடுத்த வாரம் கல்யாணத்தை வச்சுக்கணும். பெண்ணையும் அவன் லூதியானாவுக்கு கூட்டிட்டுப் போறான். குவார்ட்டர்ஸ் கிடைச்சுட்டதாம். என்னடா சொல்றே!.... ஓ அப்படியா. சதாசிவம் ஸார் பையன் என்ன சொல்றான்னா, இது பெண் விடுதலை காலமாம். அதனால பெண்கிட்டே நேருக்கு நேராய் கேட்கணுமாம். சரி, பொண்ணைக் கூட்டிட்டு வாங்க.’’

பவானிக்கு உச்சி குளிர்ந்தது. சமையலறையில் இருந்து வெளிப்பட்டு அந்த அறையின் பின்சுவரில் சாய்ந்தபடியே, அவரை ஓரக்கண் போட்டு பார்த்தாள், ராணுவக்கார னுக்கே உரிய குளோஸ்கட், சிலிர்த்து நின்ற மீசைட லட்ச னக் கருப்பு. அதாவது பளபளப்பான கருப்பு.

அப்பா, ஒங்க மகளுக்கும் ஒரு காலம் வந்துட்டு...?? என்று சொல்லப் போனாள். என்னை அவருக்குப் பிடித் திருக்குப்பா?’ என்பதை எப்படிச் சொல்வது என்று தெரியா மல், கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்து, தந்தையின் கையை எடுத்து முத்தமிட்டாள். பிறகு, மாத்திரையைத் தூளாக்கி அவர் வாயில் போட்டு, டம்ளரின் விளிம்பிலேயே அவர் உதடுகளைப் பிரித்து மருந்துாட்டியபோது-அண்ணிக்காரி, ஆவேசமாக வந்தாள். ஆத்திரமாகக் கத்தினாள்.

பொல்லாத அப்பா... பொல்லாத மருந்து. மருந்து வாங்கியே இந்த வீடு மட்டமாப்போயிட்டு. மனசு இருந்தால் எழுந்து உட்காரலாம்.’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/89&oldid=600547" இலிருந்து மீள்விக்கப்பட்டது