பக்கம்:பூநாகம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 8 |

பவானியும் தந்தையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். திடீரென்று அந்தப் பெரியவர் வாய்க்குள் போய்க் கொண்டிருந்த மருந்தை வெளியே துப்பினார். ஒரு சொட்டுகூட உடம்புக்குள் போகப்படாது என்பது போல், காறிக் காறித் துப்பினார். இதற்குள், 'பெண்ணை வரச் சொல்லுங்கள்’’ என்று ஒரு சத்தம்.

பவானி எழுந்தாள். அப்பாவை லட்சியத்தோடும், உதட்டைப் பிதுக்கி நின்ற அண்ணியை அலட்சியத்தோடும் பார்த்தபடியே நடந்தாள். பிள்ளை வீட்டாருக்கு முன்னால் வந்து, அவர்கள் கேள்வி கேட்கும் முன்னாலேயே பதிலளித் தாள.

'நான் யாரையும் அவமானப்படுத்தும் நோக்கத்துல பேசல... இப்போ எனக்கு கல்யாணம் தேவையில்லன்னு தீர்மானிச்சுட்டேன். எல்லாரும் என்னை மன்னிக்கனும், !

பவானி, மனதில் மணவாளனாக சில நிமிடங்களுக்கு முன்பு கற்பிக்கப்பட்டவனைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட் டாள். பிறகு கம்பீரமாய் திரும்பி வந்தாள். அண்ணி அமர்க் களப்பட்டாள். கைகளை நெறித்தாள். அண்ணன், சொல் லாமல் கொள்ளாமல் எழுந்து போன பிள்ளை வீட்டார் பின் னால் சிறிது நடந்துவிட்டு, மீண்டும் வீட்டுக்குள் வந்து தலையில் கைவைத்து நின்றபோது, அவர் கையைப் பிடித் தவள் இப்போது கத்தோ கத்தென்று கத்தினான்.

'இவள் கெட்ட கேட்டுக்கு இந்த மாப்பிள்ளை பிடிக்கலி யாக்கும். எவனைக் கூட்டிட்டு ஒட திட்டம் போட்டிருக் கான்னு கேளுங்க. பாவி, நம்மை தலைகுனிய வச்சுட் டாளே. இந்த வீட்டுல இவள் இனிமேல் இருக்கப்படாது.” பவானி, அண்ணியின் பேச்சை காதில் வாங்காதவள் போல், தந்தையை நெருங்கினாள். அவருக்கு விஷயம்

புரிந்துவிட்டது.

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/90&oldid=600548" இலிருந்து மீள்விக்கப்பட்டது