பக்கம்:பூநாகம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தாயாகிப் போன மகள்

செத்துக் கொண்டிருந்த தன் கையைத் தூக்க முடியாமல் தூக்கி, மகளின் இடுப்பில் அடித்தார் அப்பா. சின்னக் குழந்தை பிஞ்சு விரலால் அடித்தால் எப்படியோ அப்படி இருந்தது அந்த பிஞ்சு விரல் பட்டது. பவானி அழுத்தம் திருத்தமாக அத்தனை விளைவுகளையும் எதிர்நோக்கத் தயாராக இருப்பவள் போல் கர்ஜித்தாள். அண்ணன் அண் னிக்குக் கேட்கும்படி ஒலித்தாள்.

'உங்களை இந்த நிலையில் விட்டுப் போக எனக்கு மனசு வரலப்பா. வேளா வேளைக்கு மருந்தில்லாமலும், சோறு இல்லாமலும் நீங்க தவிக்கப் போறத நினைச்சால் என்னால் எப்படிப்பா வடநாட்டில் போய் வாழ முடியும்? உங்களைவிட எனக்கு யாரும் உசத்தியில்லப்பா. நான் தாயாகிப் போன மகளப்பா... இந்த விட்ல இடமில்லன்னா.. வேறு எந்த வீட்லயாவது தங்கி கூலி வேலை செய்தாவது, உங்களைப் பாதுகாப்பேன் அப்பா.’’

§3. 总 §§

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/91&oldid=600549" இலிருந்து மீள்விக்கப்பட்டது