பக்கம்:பூநாகம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சுண்டைக்காய் சுமப்பவர்கள்

பிடி பிடித்தால், அந்த இடத்திலேயே தேக்குச் சுவர் வாய் திறக்கும். கதவு, நாக்கு மாதிரி வளைந்து உள்ளே பற்கள் மாதிரியான மின்சார பல்புகளை காட்டும்.

இப்படிப்பட்ட இந்த அறையின் வாய்க்குள் பலர் விழுந்து கொண்டிருந்தார்கள். உள்ளே சைபர் வடிவத்தில் இரு பக்கமும் நாற்பதடி நீளத்தில் வளைந்துள்ள மேஜை போடப்பட்டு, இரு முனைகளிலும் அது ஒட்டிக் கொண்டிருந் தது. அவற்றிற்குப் பின்னால் இருபுறமும் நாற்காலிகள். இரும்போ மரமோ இல்லாதது போல், இலவம் பஞ்சு சுகம் கொடுக்கும் லெதர் நாற்காலிகள். மேஜைகள் பருவப்பெண் போல் சன்மைக்காவில் மின்னின. பல இடங்களில் பல்வேறு மைக்குகள். அவற்றின் அடிவாரத்தில் பச்சை, சிவப்பு கண் ணாடிக் கோளங்கள். மேலே பிரபஞ்சமே தரிசனம் கொடுப் பதுபோல் விதவிதமான மின்சார விளக்குகள். நட்சத்திர பல்புகள். நிலா பல்புகள். கேலெக்ஸி பல்புகள்...

இப்படிப்பட்ட இந்த அறைக்குள் முன் பகுதியில் போடப் பட்ட மூன்று நாற்காலிகளில் மூன்று கிளாஸ் ஒன் தலைகள் உட்கார்ந்திருந்தன. அவர்களுக்கு எதிர்த்தாற் போல் பத்து பன்னிரண்டு கெஜடெட் தலைகள். அத்தனை பேரும், நடுவில் உட்கார்ந்திருக்கும் ஜாயிண்ட் டைரக்டர் ராமானுஜத் தின் வாயையே கண்களால் கொத்தினார்கள். அந்த ஐம் பத்தி நான்கு ஜாயிண்டோ, அவசரத்தில் டை அடித்த தனது மீசையின் இரு நுனிகளும் அணில் வால் மாதிரி வெள்ளையாய் கொசுறு முடிகளை காட்டிக் கொண்டிருப் பதை, ஜென்டில்மென் அறையில் போய் கண்டுபிடித்த தால், இப்போது அந்த மீசையின் இரண்டு பக்கத்தையும் இரண்டு கைகளாலும் மறைத்தார். அதை ஒரு சிந்தனைச் செயலாக இதர அதிகாரிகள , நினைத்தபோது, அஸிஸ்ட் டெண்ட் டைரக்டர் சுந்தரம் லேசாக இருமினார். அதாவது, நேரம் ஆகிக் கொண்டே இருக்கிறதாம். இதனால், கவனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/93&oldid=600551" இலிருந்து மீள்விக்கப்பட்டது