பக்கம்:பூநாகம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 87

'என்னப்பா நீ. உன் வீட்டிலே இருந்து படியளக்கற மாதிரி பேசுறே.இதென்ன சாதாரண மாநாடா? சிக்கனம் பற்றிய மாநாடு. எக்கானமி இன் கவர்ன்மெண்ட் எக்ஸ் பெண்டிச்சர் கான்பரன்சுக்கு வருகிற அதிகாரிங்களுக்கு, நல்ல நல்ல வசதி செய்தி கொடுத்து, நல்லதோர் அட்மாஸ் பியர் கொடுக்கிறது நம்ம பொறுப்பாச்சே.செலவப் பார்த்தா முடியுமா? ஓ.கே. இந்த மகாநாட்டில் கலந்துகொண்டு கெய்டு பண்ண வருகிற நம்முடைய செகரட்டரி, அடிஷனல் செகரட்டா, ஜாயிண்ட் செகரட்டரி, டெப்டி செகரட்டரிகள எல்லோருக்கும் மேல நம்ம டைரக்டர்-ஜெனரல்-இவங்களுக்கு சேப்பாக்கம் கெஸ்ட் ஹவுசிலதான் புக் பண்ணியிருக்கு ...???

யெஸ் சார். பட். எல்லோரையும் சேப்பாக்கத்துல அக்காமடேட் செய்ய முடியாது. அதனால, சிந்தாதிரிப்பேட் டையில் இருக்கிற கெஸ்ட் ஹவுசில் மூன்று பேரைப் போட்டா கனும் .ஆனால் அங்க ஒரே கொசு சார். பேசாமல் டெப்டி செகரட்டரிகள போட்டிடலாமா?’’

அவங்கதாய்யா சித்ரகுப்தங்க ... சிந்தாதிரிப்பேட்டை தேவையில்ல. காரணம், நம்ம செகரட்டரி, சிக்கனத்தை மேலும் எப்படிச் செம்மைப்படுத்தலாம்னு பயிற்சி பெறதுக் காக நியூயார்க் போயிருக்கார். அடிஷனல் செகரட்டரி மிஸ்டர் ராமலிங்கம் இதே காரணத்துக்காக டோக்கியோவுக்கு போயிருக்கார். ரெண்டு பேரும் வரமாட்டாங்க..??

அப்போ. நம்ம டைரக்டர் ஜெனரல் மட்டும் இளிச்ச வாயரா?’’

இல்ல . அவரு போன வாரம் பெர்லின் போய்ச் சிக்க னத்தைப் பற்றி ஆறு நாளாய்த தெரிஞ்சுட்டு வந்திருக்கார். அப்படிப்பட்டவர் இந்த மாநாட்டுக்கு வாரது நம்மோட பாக் கியம். பாமா, இன்னுமா கணக்கு பண்ணுறே.’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/96&oldid=600554" இலிருந்து மீள்விக்கப்பட்டது