பக்கம்:பூநாகம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சுண்டைக்காய் சுமப்பவர்கள்

'இந்தக் கால்குலேட்டர் ஒர்க் பண்ண யோசிக்குது சார். ஒரு பேப்பர்ல எழுதி கணக்குப் பார்த்து இதோ சொல்லிட றேன் சார்....??

பாமா பேப்பர் கிடைக்காமல் தனது உள்ளங்கையிலேயே பச்சை குத்தியபோது, ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்த அளிஸ் டெண்ட் டைரக்டர் சுந்தரம், தன்பாட்டுக்கு பேசினார்.

கொட்டேஷன்ஸ் வாங்குற பொருட்கள் எல்லாம் இப் படித்தான் இருக்கும். இதனால சிக்கனம் பிடிக்க முடியாது. மாமூல்தான் வசூலிக்க முடியும்.’’

இந்தச் சமயத்தில் என் ஜீனியர் மோகன் எழுந்து நின்றே ஒரு யோசனை சொன் ைஈர்.

'ஏ.டி. சொல்றது கரெக்ட் ஸ்ார். இனிமேல் எந்த பொருள் வாங்கினாலும் மார்க்கெட்ல வாங்கனும், நம்மோட டிஸ்கிரிஷனரி பவர் ல வாங்கறதுக்கு பெர்மிஷன் கேக்க ணும்.’’

நாற்காலியின் பின் பக்கமாக சாய்ந்திருந்த ராமானுஜம், முன்பக்கமாகச் சரிந்து எரிந்து விழுந்தார். அதோ இருக்கிற அளிஸ்டெண்ட் டைரக்டர் சுந்தரத்தை அவர் எதுவும் செய்ய முடியாது. காரணம், கடவுளே வந்தாலும் இனிமேல் அவருக்குப் புரோமோஷன் கொடுக்க முடியாது அந்த அள வுக்கு அவரது அந்தரங்க குறிப்பேடுகள் பழுதுபட்டுப்போனது பகிரங்க ரகசியம். அதோடு, ஒரு காலத்தில் தனக்கே அதிகாரியாக இருந்தவர் இந்த சுந்தரம். இப்படி எல்லோ ரிடமும் ஏடாகூடமாகப் பேசி தண்ணியில்லாத காடுகளைப் பார்த்துவிட்டு , இப்போதுதான் சென்னைப் ப க் க ம் வந்திருக்கிறார். ஆனால் இந்த மோகனுக்கு என்ன வந்தது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/97&oldid=600555" இலிருந்து மீள்விக்கப்பட்டது