பக்கம்:பூநாகம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 89

'இந்த மாதிரி ஸில்லியாப் பேசப்படாது மோகன்... மாநாடு விவாதிக்கப் போவது மாமூலைப் பற்றி இல்ல... கொட்டேஷன் முக்கியமா, முக்கியம் இல்லையா என்கிறதும் இல்ல. இன்று நம் நாட்டுக்கு மிகத் தேவையான சிக்கனத் தைப் பற்றி ஆலோசிக்கவே மாநாடு கூடுது . அப்புறம் சோமாஜுலு-நீதானே டிரான் ஸ்போர்ட்டுக்கு இன்சார்ஜ் . செப்பு...??

சோமாஜூலு பித்தளை மாதிரி இளித்துக்கொண்டே செப்பினார் . செகரட் டரி, அடி ஷ ைல் செகரட்டரி, ஜாயிண்ட் செகரட்டரி, டெ ப்டி செகரட்டரிங்க, நம்மோட டைரக்டர் ஜெனரல் இவங்களுக்கு தனித்தனியா ஏழு ஏசி கார் புக் செய்திருக்கேன் அதோட இவங்களுக்காக ரெண்டு ஸ்பேர் கார் புக் செய்திருக்கேன். அப்புறம் எழும்பூர்ல இறங்குற ஆபீஸர்களை பிக் அப் செய்ய ஆறு கார். சென்ட்ரலுக்கு ஏழு கார் நமக்கு மூணு கார் எமெர்ஜின் எமிக்கு ரெண்டு கார். அப்புறம் ஒரு விஷயம் சார். நம்ம கிட்ட காண்ட்ராக்ட் எடுத்திருக்கிற கம்பெனிக்காரங்ககிட்ட, நீங்க கண்டிப்பா சொல்லிடணும்.இந்த மாதிரி சமயங்களிலே பத்து லிட்டர் பெட்ரோலோட காருங்களை அம்போன்னு விட்டுடறான்... ரெண்டு ஹெட்லைட்ல ஒண்ணு எரியாது. ரெண்டு கதவுல ஒண்னு திறக்காது.”

கார் கம்பெனியோடு, இஸ்குனி தொஸ்து வைத்திருக் கும் ஜாயிண்ட் டைரக்டர் பேசாமல் இருந்தபோது, பாமா நெளிந்தாள். அதுதான் செகரெட்டரியும் அடிஷன் செகரட்டரியும் வரலையே... அவங்களுக்கு எதுக்கு கார்’’ என்று சொல்லப் போனவள், அப்படிக் கேட்பது ஒழுங்கீன மாக கருதப்பட்டு, தமிழ் புத்தாண்டிற்கு ரீலிஸாவதாக எதிர் பார்க்கப்படும் தனது புரோமோஷன் பொங்கலாகிவிடக் கூடாது என்று பயந்தவள் போல், எல்லோரையும் போல் பலமாகத் தலையாட்டினாள் அப்போது, ஜாயிண்ட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூநாகம்.pdf/98&oldid=600556" இலிருந்து மீள்விக்கப்பட்டது