பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103

 5. எதிராட்டக்காரர் கடைக்கோட்டருகில் நின்று கொண்டிருக்கும்பொழுது அல்லது இடது கைப்புற ஆடுகளத்தின் பக்கக் கோட்டுக்கருகில் நின்று ஆடும் பொழுது, பந்தை அரையடி (Half Shot) அடித்து, இடம் பார்த்துத் தள்ளி விட்டால், அது, நல்ல சாதகமான பலனையே நல்கும். அது எப்பொழுதும் பயன் தரும் ஆயுதமாகவே அமையும் என்பதை நினை வில் கொண்டு ஆடவேண்டும்.


6. எதிராட்டக்காரர் சுழற்றி அடித்தனுப்புகின்ற பந்தை, அப்படியே எதிர் சுழல் தந்து (Reverse Screw) அடித்து அனுப்புவது நல்ல ஆட்டம் என்றாலும், எப்பொழுதாவது ஒருமுறை செய்தால் நன்றாக இருக்கும். அ டி க் க டி இவ்வாட்டத்திறனைக் கையாண்டால், தவறுகள் அதிகம் நேர்ந்திட, வெற்றி எண்களை இழக்கும் வாய்ப்பினை அடைவதுடன் அல்லது எதிராட்டக்காரருக்கு அதிகமாக வெற்றி எண்களை ஏற்றிவிடக்கூடிய சந்தர்ப்பத்தையும் நீங்களே கொடுத்தவராவீர்கள்.


இதுவரை, ஒற்றையர் ஆட்டத்தில் பங்குபெற்று ஆடும் ஆட்டக்காரர் எவ்வாறெல்லாம் அடித்தாடலாம் என்ற வகைகளையும் முறைகளையும் விளக்கமாகக் கூறி வந்தோம். ஆனால், அடித்தாடலாம் என்று கூறிவிட்ட பிறகு, 'தன்னையார் கேட்கப் போகிறார்கள். தவறு செய்தால், நாம் தனியாகத்தானே ஆடுகிறோம்' என்ற நிலையில் இருக்கிற பொழுது, எல்லாபந்தையுமே அடித்தாடலாம் என்ற முடிவுக்கு ஒருவர் வருவாரேயானால், அவர் எடுத்த முடிவு சரியானதல்ல. யானைதன் தலையிலேயே மண்ணைவாரிப் போட்டுக் கொள்வது போல்