பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104


தான் என்ற பழமொழிக்கு இவர் உதாரண புருஷராகி, விடுகிறார் என்பதே அர்த்தமாகிவிடும்.

வருகிற எல்லா பந்தையும் அடித்தாடலாம் என்கிற ஆசை உணர்வும் ஆவேசமும், உற்சாகமும் அடிக்கடி எழுந்தாலும், ஒருவிதமான வெறி உந்தித்தள்ளினாலும், அந்த ஆசையை அகற்றி, அப்புறப்படுத்தி, நிற்க வைத்து, நிதானப்படுத்திக் கொண்டு விடவேண்டும்.

அவ்வாறு அடித்தாட முயன்றால், வெகு சீக்கிரத்தில் களைத்துப் போய் விடுவதுடன், தொடர்ந்து ஆட முடியாது தொய்ந்துபோக நேரிடும். அது எதிராளிக்கு உற்சாகத்தை உண்டுபண்ணி, நன்றாக ஆடவும் கூடிய வலிமையையும் நல்கி விடும்.

அடித்தாடுவதால், அதிகமான தவறுகள் (Fouls), ஏற்படக்கூடும். அடிக்கின்ற பந்துக்கெல்லாம் வெற்றி எண்கள் கிடைத்துவிடும் என்பதற்கும் உத்திரவாதம் கிடையாது. வலையில் பட்டுவிடலாம். எல்லைக்கு வெளியேயும் போய் விழலாம், அல்லது சரியாகவே போனால், எதிராட்டக்காரர் பந்தை எடுத்து சாதுரியமாகத் திருப்பி அனுப்பிவிடவும் செய்யலாம்.அதனால் ,உடம்பை அலட்டிக் கொண்டு, அடித்தாடுவதுதான் ஆட்டம் என்று ஆடாமல், அமைதியாக இருந்து, தேவையான நேரத்தில் தாக்கி ஆடுவதே புத்திசாலித்தனமான ஆட்டமாகும்.

எடுத்தாடும் ஆட்டம் (Defence)

எதிராட்டக்கார்ர் வேகமாக அடித்து அனுப்புகந் பந்தினை எடுத்து ஆடி அனுப்புவதில் வல்லவரான ஒரு ஆட்டக்காரருக்கு எப்பொழுதும் வெற்றி வாய்ப்பு