பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/112

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

111

உறவினராக வரவில்லை” என்ற உண்மையை நடுவர் தனது மனத்திலே இருத்திக் கொள்ள வேண்டும். ‘’ராமன் ஆண்டால் என்ன! இராவணன் ஆண்டால் என்ன?‘’ என்று கிராமத்து மக்கள் கூறுகின்ற பழமொழிக்கிணங்க, இருவரில் யார் ஜெயித்தால்என்ன? பார் தோற்றால் என்ன? விதிகளின் வழிதான் என் மதி செல்லும்‘’ என்ற மனோநிலையுடன் நடுவர் முன்வர வேண்டும்.

இத்தகைய இனிய மனநிலையை ஏற்றுக் கொண்ட ஒருவர், அதிக அளவில், அடுத்து செய்ய வேண்டிய பணிகளும் கடமைகளும் உள்ளன. அவற்றையும் பார்ப்போம்.


2. போட்டி தொடங்குவதற்கு முன்

'நடுவராகப் பணியாற்றுங்கள்’ என்ற அழைப்பை ஏற்றுக்கொண்டவுடன், நிம்மதியாக ஒரிடத்தில் உட்கார்ந்து விட்டோ அல்லது நண்பர்களிடம் உரையாடி, அரட்டை அடித்து முடித்துவிட்டோ திடீரென்று போய், நடுவர் இருக்கவேண்டிய இடத்திற்குச் சென்று நின்று கொள்ளக் கூடாது.

நடுவர் கவனிக்கவேண்டியவை என்று அவசரமான சில பணிகள் உண்டு. அற்புதமான சில கடமைகள் 'உண்டு என்பதையும் நடுவர் மறந்து விடக் கூடாது.

போட்டி ஆட்டம் தொடங்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன்னர், ஆடுகளத்திற்குச் சென்று ஆடுகளம் அமைக்கப்பட்டிருக்கிற தரையை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ஆடுவதற்குத் தரை பொருத்தமானதாக இருக்கிறதா? ஆடும் ஆட்டக்காரர்கள் பாதங்