பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

 களுக்குத் தரையினால் ஏதும் சிராய்ப்பு அல்லது விபத்து நேர்கின்ற வாய்ப்புக்கள் இருக்கின்றனவா என்பனவற்றை சோதித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

2. ஆடுகளத்திற்குரிய அளவுகளுக்கு ஏற்ப, கோடுகள் தெளிவாகத் தெரியும் வண்ணம் சரியாகப் போடப்பட்டிருக்கின்றனவா? என்பதையும் கண்டு தெளிய வேண்டும். முறையாகக் கோடுகள் போடவில்லையென்றால், ஒழுங்காகப் போடுமாறு போட்டி, நடத்துபவர்களை பணித்து, செயல்படுத்திட வேண்டும்.

3. வலையின் உயரம் சரியாக 6 அடி இருக்கிறதா? வலையில் மணிகள் ஆங்காங்கே கட்டப்பட்டிருக்கின்றனவா? என்பனவற்றையும் அளந்து பார்த்து தெளிந்து கொள்ள வேண்டும். வலையின் உயரம் சரியாக அமையா விட்டால், ஆட்டம் ஒழுங்குற அமைதியாக நடக்காது என்பதனை போட்டி நடத்துவோரிடம் கூறி, கால தாமதம் ஆனாலும் பரவாயில்லை, காரியம் நடந்தாக வேண்டும் என்று வற்புறுத்தி, அதை நிறைவேற்றிய பிறகுதான் ஆட்டத்தைத் தொடங்க வேண்டும்.

4. நடுவர் மட்டுமே, எல்லா கோடுகளையும் கண் காணித்துவிட முடியாது. அதனால், இரு பக்கங்களிலும் இரண்டு கோடு காப்பாளர்களை (Linesmen) நியமித்துக்கொள்ள வேண்டும்.

அவர்களையும் போட்டி ஆட்டம் தொடங்குவதற்கு முன்னரே அமர்த்திவிட வேண்டும். ஆட்டம் தொடங்கிய பிறகு, யாராவது வேடிக்கை பார்க்கவந்த ஒருவரை இழுத்து வந்து, உட்கார வைப்பது மாபெரும் தவறாகும்.