பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

 தேர்ந்து தெளிந்த பிறகு, இரு குழுத் தலைவர்களிடமும் காண்பித்து, அவர்கள் அபிப்ராயத்தின் ஒப்புதலையும். பெற்றுக்கொண்டு விடுவதும் நல்லதாகும்.

8. மேலே கூறிய முக்கியமான காரியங்களையெல்லாம் முன் கூட்டியே முடித்துக்கொண்டபிறகு; தான் நின்று கண்காணிக்க வேண்டிய இடத்திற்குச் சென்று ஏறி நிற்க வேண்டும்.

நின்று கொண்டு ஆட்டத்தினைக் கண்காணிக்க வேண்டிய இடம் வசதியாக இருக்கிறதா? சூரிய ஒளி கண்ணில் பட்டுக் கூசவைக்கிறதா? நிற்கும் இடத்திலிருந்தே ஆடுகளம் முழுவதையும் நன்றாகப் பார்க்க முடிகின்றதா என்பனவற்றையெல்லாம் அனுசரித்துத் தேர்ந்து கொள்ள வேண்டும்

இன்னும் சிலர், கீழ்க்கண்டவாறு அபிப்பிராயப் படுகின்றார்கள். பூப்பந்தாட்டத்தின் ஆட்ட நேரம் மணிக்கணக்கில் ஆவதால், கைப்பந்தாட்டம், டென்னிஸ் போன்ற ஆட்டங்களில் உள்ள நடுவர்கள் அமர்ந்து கொண்டு பார்ப்பது போல, பூப்பந்தாட்ட நடுவர்களுக்கும் உட்கார வசதி செய்து தந்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் சிலர் அபிப்ராயம். வசதியினை விழாக் குழுவினர் செய்து தந்தால் விழா சிறப்பாகவே அமைந்துவிடும் என்பதால், இக்கருத்தினை விழாக் குழுவினரின் கருத்துக்கே விட்டுவிடுகிறோம்.

3. ஆட்டம் தொடங்கிய பிறகு

1. நாணயத்தை சுண்டிவிட்டு அதில் வெற்றி பெற்றவர்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டதற்கு ஏற்ப, அந்தந்தக் குழுவினர் அவரவரது ஆடுகளப் பகுதியில்