பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

117

ஏமாற்றுபவர்கள் அநேகர் உண்டு. இதை ஆட்டத். தொடக்கத்திலேயே சரியாகக் கண்காணிக்காமல் இருந்துவிட்டாலும் அல்லது பார்த்தும் பார்க்காமல் விட்டு விட்டாலும், அதுவே பின்னர் பெரிய பிரச்சினையாக வளர்ந்து, நடுவருக்குக் கெட்ட பெயரையும், பிறர் கேலி பேசும் அளவுக்கு அவமானத்தையும் உண்டு பண்ணிவிடும் என்பதால், நடுவர் மிகவும் எச்சரிக்கையாகப் பார்த்து தீர்ப்பளிக்க வேண்டும்.

3. சிலர் வேண்டுமென்றே செய்வார்கள், அல்லது. போட்டி ஆட்டத்தில் ஆர்வத்தின் காரணமாகக் கூட தெரியாமல் கையுயர்த்தி சர்விஸ் (Over Hand) போடுகின்றவர்களும் உண்டு.

கையுயர்த்தி சர்விஸ் போடுகின்றார் என்று நடுவர். கருதினால், உடனே நிறுத்தி, குறிப்பிட்ட அந்த ஆட்டக்காரரை எச்சரித்து விட வேண்டும். அவர் மீண்டும் அதே முறையைக் கையாண்டால், சர்விஸ் வாய்ப்பை இழக்குமாறு ஆணையிட்டு மாற்றிவிட வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் அலட்சியமாக நடுவர் விட்டு விட்டால், அந்த அலட்சிய நோக்கானது, எதிர்க்குழுவினர் அனாவசியமாக, முறையாக ஆடுகின்ற வாய்ப்பினை இழக்கச் செய்கின்ற பாவத்திற்கு நடுவர் ஆளாகி விடுகின்றார். இதனால் நடுவராகிய நீங்கள், எதிர்க்குழுவினர் அந்தத் தவறைச் சுட்டிக்காட்டிக் கேட்டு முறையிட வேண்டும் என்று எண்ணாமல், நடுவராகிய நீங்களே முடிவினைக் கூறி விடுவதுதான் நலந்தரும். செயலாகும். மற்றவர்கள் முறையீட்டுக்காகக் காத்திருக்க வேண்டிய தேவையேயில்லை.