பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

அநுபவத்தினையும், ஆட்ட நிலையினையும் உத்தேசித்து, தீர ஆலோசித்து வேண்டுமென்றே தாமதப் படுத்துவதைக் குறித்து, ஒரு எச்சரிக்கையைக் கொடுத்து: கடுமையாக எச்சரித்தபின் ஆட்டத்தைத் தொடர்ந்திட வேண்டும்.

2. எக்காரணத்தை முன்னிட்டும், ஆட்டத்தைத் தாமதப்படுத்தும் ஆட்டக்காரர்களை ஊக்குவிப்பது: போல அமைதியாக இருந்து விடக்கூடாது. அல்லது அவர்கள் செய்வது சரியென்று அவர்கள் நினைத்துக் கொண்டு விடுவது போல பேசாமலும் இருந்துவிடக் கூடாது, அவர்கள் செய்வது தவறு என்று அவர்களே உணர்வது போன்ற முடிவினை உடனே எடுத்து விடுவது நல்லதாகும்.

3. அடித்தெறியும் எல்லைக்கோட்டில் (Serving Crease Line) சர்விஸ் பந்து விழுந்தால், அது தவறாகும். ஆனால், ஆட்ட நேரத்தில் விளையாடப்படுகின்ற பந்து வந்து அடித்தெறியும் எல்லைக்கோட்டில் விழுந்தால், அது தவறில்லை. அது சரியான பந்தென்றே (Correct. Ball) கருதப்படும்.

குறிப்பு : ஒற்றையர் 'ஆட்டத்தை (Singles) நடத்தும்போது, அடித்தெறியும் எல்லைக்கோட்டில் விழுகின்ற எந்தப் பந்தானாலும் சரி, (Any ball), அது; ஆடுகள எல்லைக்கு வெளியே சென்று விழுந்ததாகவே! ஏற்றுக் கொள்ளப்படும் என்பதையும் நடுவர் நினைவில் கொள்ள வேண்டும்.

6. ஐவர் ஆட்டம் (Fives) நடக்கும்பொழுது

1. யார் சர்விஸ் போடுகிறர் என்பதை நினைவில் வைத்துக் கொள்வதுடன், அவரைத் தொடர்ந்து யார்