பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

யாகவும் கம்பங்களுக்கு அருகில் 6 அடி 1 அங்குலமாகவும் இருக்கவேண்டும்.

4- விளையாடும் மறைகள் (Play)

பந்தை அடித்தெறிதல் என்பது, (Serving), ஒரு பகுதியில் வலது அல்லது இடது பக்கத்திலிருந்து, மறு பகுதியிலுள்ள எதிர் மூலைவிட்டமாக (Diagonally) அமைந்துள்ள இடத்தில், பந்து விழுமாறு அடித்தெறிவது தான்.

முதன் முறையாக அடித்தெறிதலைத் (சர்விஸ்) தொடங்குகின்ற ஆட்டக்காரர், தன் ஆடுகள வலப்பகுதியில் இருந்து ஆரம்பித்து, ஒவ்வொரு வெற்றி எண் (Point) எடுத்த பிறகும் பக்கத்தை மாற்றிக் கொண்டு அடித்தெறிதலை செய்ய வேண்டும்.

2. இடுப்புக்கும் கீழாக, கை தாழ்ந்துள்ள முறையில்தான் (Under hand), அதாவது இடுப்பிற்கும் கீழாக வைத்துப் (Below the waist) - பந்தை அடித்தெறிய வேண்டும். அவ்வாறு அடித்தெறிகின்ற பந்தானது வலைக்கு மேலாகச் சென்று, அடுத்த ஆடுகளப் பக்கத்திலுள்ள அடித்தெறியும் அடையாள எல்லைக்கு அப்பால் சென்று விழவேண்டும்.

3. பந்து தரையைத் தொட்டு விடுவதற்கு முன் திரும்ப அனுப்பப்பட வேண்டும்.

4. எந்த ஆட்டக்காரரும் ஒரு முறைக்கு மேல் பந்தை தொடர்ந்தாற்போல் அடித்தாடக் கூடாது.

5. அடுத்தக் குழுவினர் ஆடத் தயாராக இருக்கும் வரை, அடித்தெறிவோர் (Server) பந்தை