பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135

வரையில் வெற்றிக்காகப் போராட வேண்டிய மனேபாவத்தையும், அளப்பரிய ஆற்றலையும் அவர்களிடையே ஏற்படுத்திட வேண்டும். அதற்காக அவர்கள் தங்கள் முழு சக்தியையும் பிரயோகித்து ஆடுமாறு அறிவுறுத்த வேண்டும்.

11. பார்வையாளர்கள் இருக்கிறார்களே, அவர்களுக்கு ஆட்டம் பார்ப்பது பொழுது போக்காகும். இரண்டு குழுவினர்களில் யாராவது ஒரு குழுவினரை ஆதரித்து அவர்களுக்காகக் கோஷம் போடுவார்கள். அத்துடன் விடாமல், அடுத்த குழுவையும் கலாட்டா செய்வார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அதற்காகவே பலர் வருவதுண்டு.

எந்தக்குழு அதிக வெற்றி எண்களை முதலில் எடுக்கின்றதோ, அந்தக் குழுவையே ஆதரித்து சத்தம் போடுவது பொதுவான பழக்கமாகும். அந்த ரகசியத்தைப் புரிந்துகொண்டு, ஆரம்பத்திலேயே வெற்றி எண்களை அதிகம் எடுத்துவிட வேண்டும்.

சிலசமயம், தோற்றுப் போகிற குழுவை ஆதரித்து சத்தம் போட்டாலும், அதிக வெற்றி எண்களைப் பெற்றிருக்கின்ற குழு, தங்கள் குழுதான் முன்னணியில் இருக்கிறது என்ற தன்னம்பிக்கையில் மேலும் துணிந்து விளையாடும் தைரியத்தை அளிக்கும்.

ஆகவே, முதலிலேயே முன்னணியில் செல்லுமாறு உங்கள் குழுவை உற்சாகப்படுத்திவிட வேண்டும்.

12. எதிராட்டக்காரர்கள் சர்விஸ் போடும் பொழுது, தவறு இழைத்து விடாமல், மிகவும் ஜாக்கிரதையாக விளையாடுதல் பத்திரமான ஆட்டம்