பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

10. வலையின் உச்சியைப் பந்து தொட்டுவிட்டு செல்லுதல்.

11. பந்தாடும்போது மட்டைகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளுதல் (clash). அதாவது ஆட்டக்காரர்கள் பந்தெடுத்தாடும் நேரத்தில் மட்டைகள் ஒன்றையொன்று தொட்டு மோதிக் கொள்ளுதல்.

12. ஆட்டக்காரர்கள் தங்களது பந்தாடும் மட்டைகளை (bat) வலைக்கு மேல் கடந்து செல்லுமாறு ஆடுதல். அல்லது

பந்தை அடித்தாடும்போது வலைக்கோட்டை மிதித்துவிடுதல்.

13. ஒரே குழுவிலிருந்து, ஒரே சமயத்தில் சேர்ந்தாற்போல் இரண்டு மட்டைகளால் தொட்டாடினால், அதற்கு இரு முறைத் தொட்டாடல் (Double touch) என்பதாகும். இருமுறைத் தொட்டாடல் தவறாகும்.

14. பந்தடித்தாடும்போது ஒரு ஆட்டக்காரர் தன் உடலால், அல்லது உடையால் அல்லது தன் பந்தாடும் மட்டையால் வலையையோ அல்லது வலையை ஏந்தி நிற்கும் அதன் உதவி சாதனங்களையோ தொட்டு விடுதல்.

15. உடல் மீது அல்லது உடை மீது பந்து படுதல்.

16. பந்தை அடித்தெறியும் போது (in serving), அந்த ஆட்டக்காரருடைய உடலின் ஒரு பகுதியோ அல்லது அவரது பந்தாடும் மட்டையோ, ஆடுகளப் பகுதிக்கு வெளியே இருத்தல்.