பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

மேலே கூறியவாறு, ஆடுகளத்திற்குரிய இடத்தைத் தேர்ந்தெடுக்கத் திட்டமிடுவது போலவே, அமைக்கும் முறைகளையும் ஆழ்ந்த கவனத்துடன் அறிந்து கொண்டு செயல்பட வேண்டியது சிறப்புடைத்ததாகும்.

பொதுவாக, சமதரையாகப் பார்த்துத்தான் ஆடுகளத்தை அமைத்து அனைவரும் ஆடுகின்றார்கள். தரை சமனாக இருப்பதுபோல் தோன்றினாலும், இன்னும் முறையாக, தரமாக ஆக்கிக்கொண்டு ஆடினால், ஆடுவதற்கு மிக அருமையான சூழ்நிலையும் அமைந்துவிடும். தரமான ஆடுகள மைதானப் பரப்பை அமைத்து விடுவதற்கு, சற்று கடினமான உழைப்பும், கொஞ்சம் கூடுதலான செலவையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். விரும்பி ஏற்றுக் கொண்டு முயற்சி செய்யும், ஆட்டத்தில் பெரும் பற்றும் பாசமும் உள்ள அன்பர்களுக்காக, ஆடுகளம் அமைக்கின்ற விதத்தையும் பதத்தையும் விவரித்திருக்கின்றோம்.

முன்னர் குறிப்பிட்டிருந்தது போல, முதலில் மைதானப் பரப்பைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும், பிறகு, ஆடுகளத்தின் அளவினை மேலோட்டமாகக் (Rough)குறித்துக்கொண்டு, அந்தக் குறிப்பிட்டப் பரப்பளவை குறைந்தது 1 அடி ஆழமாவது அழுந்தக் கொத்திவிட வேண்டும்.

கொத்தித் தோண்டிய மண்ணுள் கலந்து கிடக்கும் கூழாங்கற்கள், சரளைக் கற்கள், பாறைத் துகள்கள் போன்ற கடினமானவற்றை அப்புறப்படுத்திவிட வேண்டும். பின்னர், தோண்டிய பகுதியை சமதளமாக்கி, அதன்மேல் தண்ணீரை நிறையப் பொழிய

பூ.-2