பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

மானது 2 அடி 1 அங்குலத்திலிருந்து 2 அடி 3 அங்குலம் வரையுள்ளதாக இருக்கும். மட்டையின் பந்தடித்தாடும் தலைப்பாகம் (குறுக்களவு) 8 அங்குலத்திலிருந்து 9 அங்குலம் வரை அகலம் உள்ளதாக அமைந்திருக்கும். ஒரு பந்தாடும் மட்டையின் எடை சாதாரணமாக, 15 தோலாவிலிருந்து 20 தோலாவுக்குள்ளாகத்தான் அமைக்கப்பட்டிருக்கும். விரும்பும் எடையில் வேண்டுவோர் வாங்கி ஆடலாம்.

பந்தாடும் மட்டையை ஒருவர் எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுவது இயற்கையே! அது, தனிப்பட்ட ஆட்களது தனியான விருப்பத்திற்கேற்பவும், ஆடுகின்ற ஆட்டத்தின் தன்மைக்கேற்பவும் மாறுபடும்.

ஒரு குழுவில், முன்னாட்டக்காரர்ககளாக (Forwards) இருந்து ஆடுபவர், தலைப்பாகம் சற்று கனமுள்ளதாகத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். பின்புறம் நின்று, பின்னாட்டக்காரர்களாக (Back Players) ஆடுகின்றவர்கள் தலைப்புறம் இலேசாக இருக்கும் மட்டையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கும் மட்டையின் தன்மையும், அது எவ்வாறு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் அறிந்துகொள்வோம். ஒரு மட்டை, கீழ்க் காணும் சிறப்பியல்புகளைப் (Qualities) பெற்றிருக்க வேண்டும்.

1. நல்ல வடிவமைப்பு (Shape)

2. உழைக்கின்ற உறுதி (Strength)