பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. சேர்ந்தாடும் சிறப்பு


பொதுவாக, பூப்பந்தாட்டப் போட்டி ஆட்டம் என்றாலே, அது ஐவர் ஆட்டமாகத் (Fives) தான் அமைந்திருக்கும். ஒற்றையர், இரட்டையர் ஆட்டங்கள் என்று இருந்தாலும், ஐவர் ஆட்டத்தில்தான் சேர்ந்தாடும் ஒற்றுமையை அதிகமாகக் காண முடிகிறது.

சிறந்த ஆட்டக்காரர்கள் ஐந்து பேர்களைத் தேர்ந்தெடுத்து சேர்த்து ஒரு குழுவாக அமைத்துவிட்டால், அந்தக் குழுவே வெற்றி பெற்றுவிடும் என்று நினைப்பது உண்மையல்ல. அது வெல்வது கடினமே! ஏனென்றால், அவர்கள் ஐவரும் ஒருவரை ஒருவர் அனுசரித்து சேர்ந்து இணைந்து ஆடுவது என்பது மிகக் கடினமான காரியமே! அதற்கும் ஒரு காரணம் உண்டு.

தான் தான் சிறந்த ஆட்டக்காரர் என்ற நினைவில்: மற்றவர்களுக்குரிய பந்தைப் போய் எடுக்க முயல்வதும், அதே சமயத்தில் தன் இடத்தைக் கோட்டைவிடுவதும், பிறர் தவறிழைத்தால் கோபித்துக்கொள்வதும் இப்படியாக உள்ளுக்குள்ளே பேதம் புரையோடிப் போய் புகைந்து கொண்டிருப்பதே காரணமாகும்.

அதே சமயத்தில் சேர்ந்து ஆடும் திறனுள்ள ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டிருக்கும் ஐக்கிய மனப்-