பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

இடங்களையும் (தேவையான பொழுது மட்டுமே. எல்லா நேரங்களிலும் அல்ல) காத்து நின்று ஆடுவது நல்லதாகும்.

3. ஆட்ட நேரத்தில் ஆர்வத்தின் காரணமாக தங்களையறியாமல், முன்னாட்டக்காரர்கள், பந்தைப் பார்த்துக்கொண்டே பின்னால் அதிக தூரம் இறங்கி வந்து ஆடுவது உண்டு. இதுபோல் அடிக்கடி நேர்வதும் உண்டு. அவ்வாறு வந்து ஆடும்போது, அவர்கள் மேல் ஆத்திரப்படாமல் அறிவுரை கூறி; அவர்கள் இடத்தில் போய் நின்று நிதானமாக ஆடுமாறு செய்வது நல்ல ஆட்டக்காரர்களின் பண்பாகும்.

4. பின்னால் இறங்கி வந்து ஆடிவிடுகின்ற முன்னாட்டக்காரரின் இடத்திற்கு, பந்து திடீரென்றும் திரும்பி வரும். அப்பொழுது பின்னால் வந்தவரால், முன்னே ஓடிச் சென்று பந்தை எடுத்தாட முடியாத அவல நிலையும் உண்டாகும். அப்பொழுது, அவரிடத்தைக் காத்து நின்றாடுவது பின்னாட்டக்காரர்களின் தலையாய கடமையுமாகும்.

5. பந்தை எப்பொழுதும் உயர்த்தி ஆடுவது(Lob) (இதை குடை விரிப்பது என்று கூறிக் கொள்வார்கள் ஆட்டக்காரர்கள்) நல்லதோர் ஆட்டம் என்றாலும், எதிர்க் குழுவின் முன்னாட்டக்காரர்கள், மைய ஆட்டக்காரர் இவர்களிடம் பந்து கிடைக்காத வண்ணம், கடைக் கோட்டைக் குறிவைத்து ஆடுவதுதான் சிறப்பான ஆட்டமுறையாகும்.

6. எப்பொழுதாகிலும் வலிமையாகப் பந்தை அடித்தாடலாம் என்று முன்னர் கூறியிருந்தோம். அவ்வாறு அடித்தாட எண்ணும்போது, ஒன்றை