பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குள்ளாக்கிவிடும். ஏனெனில் அது போன்ற பந்தை, எதிராட்டக்காரர்கள் எளிதாக அடித்து ஆடி முடித்து விடுவார்கள்.

5. கடைக் கோட்டருகில் உள்ள பகுதிக்கு சர்விஸ் பந்து போவதுபோல, பந்தை உயர்த்திப் போடுகின்ற முறை நல்ல சர்விஸ் முறையாகும்.

6. அவ்வாறு போடாத பொழுது, எதிர் ஆட்டக்காரர்களிடையே விடப்பட்டிருக்கும் இடைவெளி (Gap) பார்த்து அங்கு போய் பந்து விழுவது போன்ற தன்மையில் போட வேண்டும். அதையும் எதிர் ஆட்டக்காரர் மிகவும் சிரமப்பட்டு எடுத்தாடும் நிலையில் இருந்தால் மிகவும் நல்லதாகும்.

7. பந்தை சுழல விட்டுப் போடுவதும் (Twist) அல்லது மிக உயரமாகப்போய் வருவது போல போடு வதும் (High) ஒரு சிலரால் தான் முடியும். அதுவும், அதிகமான பயிற்சிக்குப் பிறகே பெறக்கூடிய பரிசாகும்.

அது போலவே, வலையோரத்தில் எதிர்க்குழு பகுதியில் பந்தை மெதுவாக இடுவதற்கும், மிகவும் தேர்ந்த திறன் வேண்டும். அது, பந்தைக் கையாளும் கெட்டிக்காரத்தனத்தால்தான் கிடைக்கும். இது போல் சாமர்த்தியமாகப் போடத் தெரியாவிட்டால், அதை கையாளாமல் இருப்பது நல்லதாகும்.

ஆகவே, மேற்கூறிய சர்விஸ் முறைகளில் உங்களுக்கு எந்த முறை எளிதாக வருகிறதோ, அதையே பழக்கப்படுத்திக் கொண்டு, ஆழ்ந்த பயிற்சியில் ஈடுபட்டு, விருத்தி செய்துகொள்ள வேண்டும்.