பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அழகாக இருக்கிறது என்பதற்காக, இந்த ஆயுதத்தை அடிக்கடி பிரயோகித்துவிடக் கூடாது. இது வெற்றி பெறுகிறது என்றால், வலையை ஒட்டினாற்போல போய் விழுகிறது என்பதில்தான் அடங்கியிருக்கிறது. இம்மாதிரி ஆடுவது அதிகமான பயிற்சி மிக்கவர்களுக்கே கைவந்த கலையாகும். ஆரம்ப நிலையில் உள்ள புதிய ஆட்டக்காரர்கள் இந்த ஆடும் முறையை கையாளவே கூடாது.

இந்த ஆடும் முறையை, எதிராட்டக்காரர் வலையிலிருந்து அதிக தூரத்தில் நின்று ஆடிக்கொண்டிருக்கின்ற சமயத்தில், அல்லது ஒடி வந்து எடுக்கமுடியாத சூழ்நிலையில் நின்று கொண்டிருக்கிற நேரத்தில் இந்த இடம் பார்த்துப் போடுவதில் வெற்றி பெறலாம்.

இவ்வாறு இடம் பார்த்துப் போடப் போகிறார் என்பதை எதிராட்டக்காரர்கள் முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியாதவாறு, மிகவும் தந்திரமாக செயல்பட வேண்டும்.

இதுபோல் இடம் பார்த்துப் போடப் போகிறீர்கள் என்பதையும் உங்கள் குழுவினர் அறிந்துகொண்டிருக்க வேண்டும். அத்துடன் அவர்கள் உடனே எடுத்தாடவும் தயார் நிலையில் நின்றிருக்க வேண்டும். இல்லையேல் இவர் இடம் பார்த்து போடப்போய், எதிராட்டக்காரர் ஓடி வந்து எடுத்து, இவர் குழுப்பக்கம் போட்டுவிட இவர்கள் தயாராக இல்லாமல் இருந்தால், உள்ளதுக்கும் மோசம் வந்ததுபோலல்லவா ஆகிவிடும்!

5. தாக்கி அடித்தல் (Smash)

தாக்கி அடித்தாடுவதானது, பந்தை வலிமையாக அடித்து ஆடுவதாகும். இந்த ஆடும் திறனை எல்லா