பக்கம்:பூமியின் புன்னகை.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

பூமியின் புன்னகை




தலைவர் கழற்றி வைத்ததும் பின்புற மிருந்து
கலைவலார் கரங்கள் கணக்காய் நீண்டு
கடத்தின மாலையை-மறுபடி அதுவே
மாணிக்க மாலையாய்ப் பேசுவோர் கழுத்தில்


பின்பும் விழுந்தது பேசுவார் கழற்றப்
பின்புறம் கடந்துபோய் மீண்டும் அதுவே
இம்முறைப் படியே இலகுவாய் நயமாய்
முப்பது பேருக்கும் முன்னால் வந்தது


இருதய சாமி இலக்கிய மன்றச்
செயலர் மட்டுமா? எத்தனை காலம்
பயிற்சி இருந்தால் இப்படித்திறமை
சாத்திய மாகும் என்றே என்னுள்


அதிசய உணர்வு அதிகமாய்ப் பொங்கக்
கூட்ட முடிவில் தனியே கூப்பிட்டு
இருதய சாமியை இருதய மாரப்
பாராட் டுரைத்துப் பலவாய்ப் புகழ


'வேறு வழியில்லை மன்றத்தில் பணம் குறைவு
மாலை விலையோ அதிகமாய்ப் போச்சு
சாமர்த்தியமாய்ச் சமாளிக்கிறேன்' என்றார்
சபாஷ்! உமது சாமர்த்தியம் வாழ்க! என்றேன்.