பக்கம்:பூமியின் புன்னகை.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.




தீபாவளி மாப்பிள்ளை 1970 ரகம்

• அத்திம்பேர் வாங்கிவரும் சீனவெடி
ஆசையினால் அக்காபால் தூதுபோகும்

முத்தான தம்பியர்கள் எல்லாரும்
முழுப்பக்க நகைச்சுவையாய் வெளிவந்து

பத்திரிகை மலர்களிலே நிறைந்திருப்பர்
பட்டாசு சுடுகையிலே நடுநடுங்கி

அத்தானைத் தழுவிடும் அம்புலுவை
அம்பிகளும் கேலிசெய்து சிரித்திருப்பர்.

துப்பாக்கி சுடுகின்ற ஜேம்ஸ்பாண்டின்
சுறுசுறுப்புப் படம்பார்க்க விரைகையிலே

அப்பாவே எதிர்ப்படினும் சுட்டுவிடும்
அம்பியைப்போய் அக்காவைக் கூப்பிடென்றால்

தப்பாமல் மறுத்துவிட்டு நழுவலன்றிச்
சமரசமாய் ஒத்துழைக்க இசையமாட்டான்

ஜப்பானில் எக்ஸ்போ பார்த்துவிட்டுத்
தாய்லாந்து வழியாகத் திரும்பிவரும்