பக்கம்:பூமியின் புன்னகை.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

பூமியின் புன்னகை



ஏதோடெலிபோன் ஆபரேட்டர் டைப்பிஸ்ட்
இங்க் ஃபில்லர் குண்டுசி எலிவேட்டர்

மாதரசி ஹேர்ப்பின் மாங்காய் ஊறுகாய்
மண்ணெண் ணெய்ப் புனல் ஸ்குருஆணி

மீதமுள்ள தெல்லாமே தேர்ந்தெடுத்து
மெதுவாய் ஒருபுதுக்கவிதை பாடுதற்கு

ஒன்ஸைட் பேப்பர் கிடைக்கவில்லை-அதனால்
என்கவியை இன்னும்நான் படைக்கவில்லை.

எழுத்துநடை கணையாழி என்றெல்லாம்
எழுதுவதைப் போட்டுவிட இதழிருந்தும்

முழுத்தரத்தில் புதுக்கவிதை என்கிற
முழுமூச்சுப் போருக்குத்தளம் அமைத்து

அழுத்தமுறப் போரிடவென் றன்பர்பலரிருந்தும்
அண்டர்வேர் கிழிந்ததனைக் கருப்பொருளாய்

ஆக்கிவிட்டே அறுநூறுபுதுக்கவிதை பாடிடலாம்
கிண்டிரேஸ் ஸ்டுவர்டைக் கவிகளிலே கிளந்திடலாம்

ஒன்ஸைட் பேப்பர் கிடைக்கவில்லை-அதனால்
என்கவியை இன்னும் நான் படைக்கவில்லை.

டீஸல் மணம்கமழும் சென்னைநகர்ப் பேருந்தில்
திருக்குறளைப் படித்தபடி ஆடி விழும்

பாஸஞ்சர் படுந்தொல்லை அத்தனையும் கூறுதற்குப்
பஸ்ஸாற்றுப் படையொன்று பாடிடுவேன்

வாஸ்லைன் ஊதுபத்தி டூத்பேஸ்ட் பார்சோப்
வைப்பர் ஸ்டெப்னி ப்ரேஸியர்ஸ் இண்டிகேடர்

ஹோஸ்டஸ் நரிக்குறத்தி நகரசபை பில்கலெக்டர்
இவரனைவரையும் புதுக்கவிதை பாடத்திட்டமிட்டும்

ஒன்ஸைட் பேப்பர் கிடைக்கவில்லை-அதனால்
என்கவியை இன்னும் நான் படைக்கவில்லை.