பக்கம்:பூமியின் புன்னகை.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாகரிகப் பிச்சை


ஐயாசாமீ! அரைக்காசு தர்மமென்றே
அழுகுரலில் கேட்பவர்கள் யாசிப்போர்

கையால் மொழியால் கண்ணீரால்
காசினியோர் முன்பாக மன்றாடிக்

குய்யோ முறையோவென் றலறியபின்
கூழுக்கும் கந்தைக்கும் வழிபிறக்கும்

மெய்யாய் இவர்நிலைதான் இப்படியாய்
மேலும்மொரு பிச்சையின்று வளர்கிறது

ஓட்டுக்குப் பிச்சை உதவிநிதிப் பிச்சை
உபசரிப்பு விழாவுக்குப் பொருட்பிச்சை

நாட்டுக்கு நன்மைசெயும் தொண்டுக்கு
நாள்தோறும் விலைபோலப் பலபிச்சை

வீட்டுக்கு நிதிவழங்கும் விநோதங்கள்
விரைவாகப் பறந்துசென்றே தொண்டுசெயும்

ரேட்டுக்குத் தகுந்தாற்போல் கார்வழங்கல்
நிறுவைக்குச் சரிசமமாய் வெங்காயம்