பக்கம்:பூமியின் புன்னகை.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நா. பா.

27


வீச்சுவீச்சென்று கூத்தாடும்
விலைமகளிர் நடனங்கள் படமெல்லாம்
பேச்சியணை பிரமனூர் அரண்மனைகள்
பிருந்தாவனம் சாத்தனூர் சிவசமுத்திரம்

கூச்சமின்றி யிங்கெல்லாம் பலர்கூடிக்
குரங்குகள்போல் குதிப்பதுவும் ஏராளம்

பாட்டுத் தொடங்குங்கால் உள்ளூர்ப் பார்க்காகி
பத்துமணித்துளியில் ஊட்டிமலைமீதில்

மேட்டுத் தரைநெடுகப் பாடியலைந்திடுவார்
முடிவதற்குள் மேட்டூர் மலம்புழாஎன

நாட்டிலுள்ள நந்தவனம் அத்தனையும்
நாடிப்போய்ப் பாட்டொன்று பாடிடவே

நானொரு படம்பார்த்தேன் பட்டி
நாய்கள் சிரிக்கும் தெருக்கூத்தாய்

நானொரு படம் பார்த்தேன்.

கொக்குச் சுடுவதுபோல் துப்பாக்கிக்
குழலெடுத்து-எதிரிகளை அக்கணமே

பக்குப் பக்கென்று சுட்டுவிட்டுப்
பல்லை நறநறவென் றசைத்துச்

சக்கைப் போடு போடுகின்ற
சராசரியாம் சினிமா வில்லன்

தலைமாட்டில் விளக்கணையும் சமயத்தே
டைரக்டர் சொன்னபடி சாகின்ற