இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
56
பூமியின் புன்னகை
சொந்தநிலை மறந்தெல்லாச் சொகுசினுக்கும்
சுகபோகச் சுரண்டலுக்கும், ஊழலுக்கும்
எந்தமது வரிப்பணத்தைச் சூறையிட்டு
இங்கேயும் அங்கேயும் பறந்துவரும்
இந்தநிலை தனைக்கண்டால் தோன்றாதோ
‘இவரன்றோ புதுமன்னர் பொதுமன்னர்.’
(ஜனவரி-1971)