பக்கம்:பூமியின் புன்னகை.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வென்றாலும் தோற்றாலும்


•போடா போ தேர்தலில் நான் வென்றிடுவேன்
பொல்லாத வேளையினால் தோற்றிடிலோ

சோடாக்கள் கல்லெறிகள் செய்திடுவேன்
தோல்வியினை மதிக்கமாட்டேன் சகிக்கமாட்டேன்

காடா மல் துணிவாங்கிக் கொடி எழுதிக்
கைவலிக்கச் சுவர்முழுவதும் தமிழ் எழுதிப்

போடாபோ தேர்தலில் நான் வென்றிடுவேன்
பொல்லாத வேளையினால் தோற்றிடிலோ

சோடாக்கள் கல்லெறிகள் செய்திடுவேன்!
எதிராளி வேட்பாளர் கொடிகளை நான்
இழுப்பதற்கும் பறிப்பதற்கும் கிழிப்பதற்கும்

அதிரடியாள் படையொன்று வைத்திருப்பேன்
ஆகாதார் கூட்டத்தைக் கலைப்பதற்காய்ப்