பக்கம்:பூமியின் புன்னகை.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

பூமியின் புன்னகை


பொதிமாடு பன்றியுடன் கழுதைகளைப்
புகுத்திவிட்டுப் பயப்படுத்தல் நானறிவேன்

அதிசயமாய்த் தேர்தலில்நான் வென்றிடுவேன்
அல்லாமற் போயிடிலோ கல்லெறிவேன்!

ஓட்டெல்லாம் எனக்கெதிராய்ப் போட்டுவிட்ட
'உலுத்தர்களை’ வீடு மட்டும் உட்புகுந்து

ஆட்காட்டிப் பயமுறுத்தி அழவைப்பேன்
அடி உதைகள் செய்பவர்கள் எண்ணிக்கை

‘டாப்’ லிஸ்டில் இருப்பதுதான் எம் கட்சி
தடியர்படை குடியர்படை சாணியடிப்

போர்வீரர் எல்லாரும் எங்கள்படை
சரிந்து விட்டால் கல்லெறிவோர் எங்கள்படை!

மாற்றார்கள் கூட்டமெலாம் நடக்காமல்
மாட்டிவைக்கும் வழியனைத்தும் நானறிவேன்

ஆற்றிலினால் பலலட்சம் மக்களெலாம்
அந்த மாற்றார்க்குக் கூடிவிட்டால்

மேற்றிசையில் மின்சார மெயின் சுவிட்சை
மூட்டுடைத்தே இருள்வெள்ளம் மூழ்கவைப்பேன்

காற்றடிக்கும் வேகத்தில் கல்லடிப்பேன்
கைகாலை வெட்டுதற்கும் சொல்லிவைப்பேன்.

ஜனநாயகம் சமதர்மம் நல்லாட்சிச்
சாதனைகள் இவையெல்லாம் நானறியேன்