பக்கம்:பூமியின் புன்னகை.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பா.

7


திருந்தாதோ இவ் வுலகமெனச் சீறுகையில்-அவள்
சிவப்பாய்ப் பூத்துச் சினக்கின்றாள்.
 
வருங்கால நம்பிக்கை சமாதானக்-காட்சி
வகுப்பது போல் வெள்ளை வண்ணம்

தருங்கால நன்மைகளின் மங்கலத்தை-ஒரு
சாட்சியிட மஞ்சள் நிற மலர்ச்சிகளும்

ஒழுங்கான நலத்துடனே உதவிகளை-இனி
உருவகிக்கும் பச்சையொடு நல் நீலம்
 
இனக்கொலை மனக்கொலை படுகொலைகள்-உலகில்
இருப்பவர் இல்லார் பேதங்கள்
 
தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்-உருகித்
தவித்திடல் வருந்திடல் தளர்ச்சிகள்

எனப்பல துயர்களில் இடிந்தயர்ந்தே-வாடி
இதயம் கறுத்த வேதனைகள்

கணக்காய் மலர்ந்த கறுநிறமாம்-அங்கு
கனக்கும் இதயச் சுமையவையாம்!
(இவ்வாறாய்ப்)

பூமி சிரிக்கும் சிரிப்பறிந்தும்-நல்ல
புத்தி தெளியா மானிடரே

நீவி யெடுத்தே நறுமலரை-நீர்
நித்தலும் தொடுத்து நுகர்கின்றீர்!

கேலி யெடுத்து நகைப்பதனை-இரு
காது கொடுத்துக் கேட்டிலிரேல்

பாவி மண்ணில் அங்கங்கே-கண்கள்
பார்த்தும் புரிய முடியாதோ?