பக்கம்:பூமியின் புன்னகை.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா.பா.

93


நாட்டு மக்கள் வயிற்றில் நிறைந்த
காட்டுப் பசியும் பர்ஸில் குறைந்த
சில்லறைக் காசும் மாத இறுதியின்
மந்த நிலைமையில் கடைசி பஸ்ஸைக்

கைவிட நேர்ந்தால் நடந்தே வீடு போக
நேரிடும் என்ற பயத்தின் நிமித்தமாய்
மெல்ல எழுந்து கும்பல் கும்பலாய்க் கலைந்தனர்.
“இறுதியாக நிகழ்ச்சியின் மணிமுடி சிறப்புரை”

என்றும் “முக்கியப் பேச்சாளர் பேசுவார்” என்றும்
தலைவர் எழுந்து அறிவித்தபோது மைதானம் காலி,
பிரதம விருந்தினர் காலி மைதானத்தைக்
கனிவுடன் நோக்கிப் “பெருமக்களே! தாய்மார்களே!

உடன் பிறப்புக்களே! ரத்தத்தின் ரத்தமே!” என்று
எத்தனையோ சொல்லி அழைத்தும் யாருமில்லை!
அத்தனை பேரும் சதிசெய்து அகன்றிருந்தனர்.