பக்கம்:பூமியின் புன்னகை.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

Scandal Wood


• Sandal Wood என்பதனைத் தவறாக
Scandal Wood என்றச்சுக் கோத்திருந்த
ஆங்கிலத் தினசரி இதழின் பிழையைத் திருத்திய
சீஃப் புரூஃப் ரீடர் உடனே

“காட்டு இலாகாப் பொறுப்பில் இருந்த
மந்திரி தம்பியே ஜீப்பில் இரவில்
சந்தன மரத்தைக் கடத்தினார்” என்னும்
அடுத்த புரூஃபின் ‘காலி’ தேடி வரவே

முந்திய புரூஃபை மறுபடி திருப்பி வாங்கி
ஏற்கெனவே திருத்திய பிழையைப் பழையபடியே
Scandal Wood என்று பிழையாகவே அச்சிடச் சொன்னார்
“சில பிழைகள் சரியாகவே வாய்க்கின்றன!