பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் w 85 வாதாபி கணபதிம் பஜே என்ற ஹம்ஸத்வனி கீர்த்தனையை எடுத்துப்பாடி அமிர்த துளிகளை அள்ளி அள்ளிவீச வீணை, புல்லாங்குழல், பிடில் முதலிய வாத்தியங்கள் யாவும் அதே பாட்டை ஒரே காலத்தில் பாட ஆரம்பித்தன. அந்தச் சங்கீதம் தேவர்களும், மூவர்களும் கேட்டு மூக்கில் விரலை வைத்து ஆச்சரியமுற்று நைந்துருகத்தக்க மகா மாதுரியமான தேவகானத்தைவிட அதிசிரேஷ்டமானதாக இருந்தது. அந்த மடமயிலார் ஐவரும் தத்ரூபம் ஊர்வசி, மேனகை, திலோத்தமை, ரம்பைகள் போல அழகே வடிவாக ஜ்வலித்ததைக் கண்டும், அவர்களால் பொழியப்பெற்ற தேவாமிர்த ஊற்றைப் பருகியும், அந்த இரண்டு புருஷரும் பிரமித்து, வியப்புற்று, ஸ்தம்பித்து, மோகித்து நெக்குவிட்டு இளகி, உருகிப் பரவசம் அடைந்து மெய்மறந்து உட்கார்ந்தி ருந்தனர். சகிக்கவொண்ணாத ஆனந்தப் பெருக்கினால் அவர்களது உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் உரோமம் சிலிர்த்து நின்று, அந்தச் சங்கீதத்திற்கு ஒத்தபடி ஆனந்தத் தாண்டவ மாடின. அவர்களிருவரும் இந்திர விமானத்தில் அமர்ந்து சுவர்க்க லோகத்தில் புகுவோர் போல இன்பத்தில் மூழ்கி மதிமயங்கி உணர்வு கலங்கிக் கிடந்தனர். c அவ்வாறு அந்த இன்பகரமானசங்கீதக்கச்சேரி இரண்டு மணி நேரம் வரையில் நடைபெற்றது. பெண்கள் மேலும் இன்னொரு பாட்டை எடுத்துப் பாடத் தொடங்க, உடனே இளவரசர், 'அடி அன்னம் பாட்டுக் கச்சேரி இவ்வளவோடு நிற் கட்டும்; உன்னுடைய பெண்கள் சங்கீதத்தினாலேயே என்னைக் - கொன்றுவிடுவார்கள் போலவிருக்கிறது. ஐந்து பெண்களும் சேர்ந்து வாரி வீசும் இன்பத்தைத் தாங்க என்னுடைய காதுக்குச் சக்தி போதவில்லை. இதோ பார், தாத்தா மயங்கி விழுந்து கிடக்கிறார் என்று வேடிக்கையாகக் கூற, அதைக்கேட்ட அன்னம், தனது பெண்களைப் பார்த்து, மங்களம் பாடும்படி சொல்ல, அவர்கள் சிறிய மங்களமொன்றைப் பாடி நிறுத்தினார்கள். அதன்பிறகு மேலே கொக்கியில் மாட்டப்