பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 95 போகிறார்கள் என்பதையும், என்ன செய்யப் போகிறார்களோ என்பதையும் இளவரசரும் ஜெமீந்தாரும் யூகித்துப் பார்த்ததெல்லாம் பலனற்றுப் போயிற்று. அவர்கள் வண்டியின் உட்புறத்தில் காரிருளிற்குள் புதைபட்டிருந்தமை யால், வெளிப்புறத்தின் குறிப்புகளில் எதையும் அவர்கள் கவனிக்க முடியாமல் இருந்தது. அவ்வாறு கருங்கல் தரையில் சென்ற வண்டி சிறிது தூரத்திற்கு அப்பால் போய் நின்றது. உடனே அந்த முரட்டாள்கள் வண்டியைவிட்டுக் கீழே இறங்கினார்கள். கட்டாரி ஒரு பக்கத்துக் கதவினண்டையில் வந்து, பக்கப் பலகைகளை நகர்த்திவிட்டு உட்புறத்தில் கையைக் கொடுத்து தாழ்ப்பாளைத் திருப்பிக் கதவைத் திறந்துவிட்டு, 'சரி, கீழே இறங்குங்கள்' என்று அதிகாரமாகக் கூறினான். இளவரசர் முதலில் கீழே இறங்கினார். அவருக்குப் பிறகு மருங்காபுரி ஜெமீந்தார் இறங்கினார். உடனே சாரதி, காசாரி ஆகிய இருவரது கட்டுகள் அவிழ்த்து விடப்பட்டன. அவர்களும் கீழே இறங்கினார்கள், முகமூடி தரித்துப் பனைமரங்கள் போல விகாரமாக நின்ற ஏழெட்டு முரட்டாள்களும் கைகளில் கத்தி, பிஸ் டல் என்ற கைத்துப் பாக்கிகள், தடிகள் முதலிய ஆயுதங்களை வைத்துக்கொண்டு நாற்புறங்களிலும் சூழ்ந்து நின்றதைக் கண்ட இளவரசர் முதலிய நால் வருக்கும் குலைநடுக்க மெடுத்தது. அவர்களது கைகால்களெல்லாம் வெடவெட வென்று ஆடுகின்றன. அந்த இடம் மரங்கள் நிறைந்ததாகக் காணப்பட்டமையால், எங்கும் ஒரே அந்தகாரம் சூழ்ந்திருந்தது. ஆனால், எதிரில் பிரம்மாண்டமான ஒரு கட்டிடம் நின்றதாகத் தெரிந்தது. உடனே கட்டாரித்தேவன் இளவரசர் முதலிய நால்வரையும் பார்த்து, "நடவுங்கள்' என்று அதிகாரமாக அதட்டிக் கூற உடனே எல்லோரும் நடந்து அந்தக் கட்டிடத்தண்டை நெருங்கினர். அவ்விடத்திலிருந்த ஒரு கதவு உடனே திறந்துவிடப்பட்டது. அந்தக் கதவிற்கு அப்பால் மங்கலாக எரிந்துகொண்டிருந்த ஒருவிளக்கு காணப்பட்டது.