பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 109 வசப்படுத்திக் கொள்வதே உசிதமாகத் தோன்றியது. ஆகையால், இளவரசர் அவளை நோக்கி மரியாதையாகவும் நயமாகவும் பேசித் தானாகக் கனியச் செய்து கொண்டிருந்தார். அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பார்சி ஜாதி அணங்கு மிகவும் உருக்கமாகவும், வாஞ்சையாகவும் அவரைப் பார்த்துப் புன்னகை செய்து, 'நான் நிற்பது எனக்கு நிரம்பவும் பிரயாசையாக இருக்குமென்று மகாராஜா நினைக்கிறது சரியல்ல. பெண்பிள்ளை ஜென்மம் எடுத்தவர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கும், கணவருக்கும், தாய் தகப் பன்மாருக்கும் எவ்வளவு பிரயாசைப்பட்டுப் பணிவிடை செய்தாலும், அவ்வளவும் அவர்களுக்கு ஆனந்தமாகவும் இன்பகரமாகவும் இருக்குமேயன்றி, ஒரு நாளும் துன்பமாகவே தோன்றாது. தான் காதல் கொண்ட புருஷருடைய மனசைப் பலவகையிலும் சந்தோஷப்படுத்த முயல்வதே பெண்பாலுக்கு ஒரு பெருத்த சுகம். ஆகையால், தங்களிடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டால், அப்படி உட்கார்ந்திருப்பது நம்முடைய யோக்கியதைக் குத் தகாத காரியமாயிற்றே என்ற ஒர் எண்ணம் மனசில் உதித்துத் துன்பத்தையும் சஞ்சலத்தையும் உண்டாக்கி வைத்துக்கொண்டே இருக்கும். இப்படி நிற்பதனால், நான் தங்களிடத்தில் காட்டவேண்டிய மரியாதையைச் சரியானபடி காட்டுகிறேன் என்ற ஆனந்தமும் பூரிப்பும் இப்போது என் மனசில் பொங்கியெழுந்து எனக்கு இன்பம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. அவரவர்கள் தத்தம் நிலைமைக் குத் தகுந்தபடி நடப்பதே சுகமன்றி, அதை மீறித் தகாதகாரியம் செய்தால், அது முதலில் சுகமாகத் தோன்றினாலும், எப்போதும் நீடித்து நிற்காமல் கெட்டுப் போய்விடும். ஆகையால், நான் இன்னும் கொஞ்சநேரம் இப்படியே நின்று பேசுகிறேன். என்னுடைய தேகம் தங்களுக்கருகில் அவசியமாக வந்துதான் தீர வேண்டுமென்ற சந்தர்ப்பம் ஏற்படும்போது, நான் இங்கே நிற் பேனா? இந்த விஷயத்தில் இன்னொரு விசேஷமும்