பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 பூர்ணசந்திரோதயம்-1 காகிதத்தில் நான் எழுதுகிறேன். அதனடியில் தாங்கள் கையெழுத்துச் செய்து கொடுக்க வேண்டும். தாங்கள் அப்படிக் கையெழுத்துச் செய்த அதே கூடிணத்தில் நான் தங்களுடைய ஆசைநாயகி ஆகிவிடுகிறேன் என்று சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பெய்வதுபோல அதிமாதுரியமாகக் கூறினாள். அதைக் கேட்ட இளவரசர் மிகவும் வியப்புற்று, "இவ்வளவு தானா! நான் என்னவோ பெரிய காரிய மென்றல்லவா பயந்துவிட்டேன். நீ எதை எழுதிக்கொண்டு வந்தாலும் நான் கையெழுத்துச்செய்யத் தடையில்லை. காகிதமிருந்தால் எடுத்து எழுதிக்கொண்டு வா; தாமசம் செய்யாதே' என்று மிகுந்த ஆவேசத்தோடு கூறினார். உடனே அந்தப் பெண், "இதோ எழுதியே தயாராக வைத்திருக்கிறேன். தாமசமே ஆகாது' என்று மறுமொழி கூறியவண்ணம் சடக் கென்று பாய்ந்து சிறிது தூரத்திற்கு அப்பாலிருந்த ஒரு மேஜையின் சொருகுபெட்டியைத் திறந்து, அதற்குள் ஆயத்தமாக எழுதிவைத்திருந்த காகிதத்தையும் மைக் கூட்டையும் இறகையும் கொணர்ந்து கொடுத்தாள். இளவரசர் அந்தக் காகிதத்தில் எழுதப்பட்டிருந்ததைப் படிக்க, அது, அவள் சற்றுமுன் சொன்னது போலவே இருக்கக்கண்டு, இறகை வாங்கி அலட்சியமாக அதன் அடியில் தமது கையெழுத்தைச் செய்துவிட்டு, "இதோ ஆய்விட்டது; எடுத்துக்கொள் என்று கூறிப் பேனாவைக் கீழே வைத்து விட்டு அவள்மீது கைபோடத் தொடங்கினார். அவள் அப்போதும் இடங்கொடுக்காமல் நகர்ந்துகொண்டு, 'தங்களுடைய முத்திரை மோதிரத்தால், இதனடியில் ஒர் அரக்குமுத்திரை வைத்துக்கொடுக்க வேண்டும். அவ்வளவுதான். அதற்குமேல் நான் தங்களுக்குச் சிரமம் கொடுக்கிறதில்லை. அதன்பிறகு தங்களுடைய பிரியப்படி நடந்து கொள்ளுங்கள் என்று கெஞ்சி மன்றாடிக் கூற, இளவரசர், “ஏதேது, நீ எவ்வளவு முன்