பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பூர்ணசந்திரோதயம்-1 பெட்டியில் வைத்துவிட்டு ஒட்டமாக ஓடி வருகிறேன் என்று குதுகலமாகக் கூறியவண்ணம் மகிழ்ச்சியே வடிவாக அவ்விடத்திலிருந்து விரைவாகப் பாய்ந்து அந்தக் காகிதத்தை எடுத்துக்கொண்டு சிறிது தூரத்திற்கு அப்பாலிருந்த ஒரு பீரோவில் வைத்துப் பூட்டிவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுப் போனாள். போனவள் அந்தப் பக்கத்திலிருந்த பீரோக்களின் இடையில் புகுந்து சென்றதாகத் தெரிந்தது. இளவரசர் அவள் சென்ற பக்கமே தமது விழியை வைத்து அவளது இனிய வடிவத்தைப் பார்த்தபடியே ஆவலோடு காத்திருக்க, அந்த வடிவத்தை ஒரு பீரோ மறைத்துக்கொண்டது. அவள் அந்தக் காகிதத்தை வைத்துவிட்டு அதிசீக்கிரத்தில் வருவாள் என்று நினைத்து மிகுந்த பதைப்பும் ஆவேசமும் கொண்டவராய் இளவரசர் உட்கார்ந்திருந்தார். மேன்மாடத்தில் இளவரசரது அதிர்ஷ்டம் இவ்வாறிருக்க கீழே இருட்டறையிலிருந்த மருங்காபுரி ஜெமீந்தாருக்கும் இரண்டு ஆட்களுக்கும் நேரிட்ட விஷயத்தைக் கூறுவோம். அந்த மூவரது நிலைமையும் மகா பரிதாபகரமாகவும், பயங்கர மாகவும் இருந்தது. இளவரசர் அவர்களைவிட்டுப் போனபிறகு ஜெமீந்தாரும் மற்ற இருவரும் மிகுந்த திகிலும் கலக்கமும் கொண்டு நடுங்கலாயினர். விளக்கில்லாமல், கறுப்புத் திரைகளால் மூடப்பட்டு அந்தகாரத்திற்குள் ஆழந்து கிடக்கும் தங்களை அந்த முரட்டு மனிதர்கள் எவ்விதமான கொடுமைக்கும் சித்திரவதைக்கும் ஆளாக்குவார்களோ என்ற கவலையும் அச்சமும் எழுந்து அவர்களை உலப்பத் தொடங்கின. எந்த நிமிஷத்தில் அந்த முரட்டாள்கள் தங்கள்மீது பாய்ந்து தங்களை வதைப் பார்களோ என்ற நினைவினால், அவர்கள் நிரம் பவும் வேதனைக்கு உள்ளாகி இருந்தனர். தனியராகப் பிரிந்துபோன இளவரசருக்கு அவர்கள் எவ்விதமான பொல் லாங்கு இழைக்கப் போகிறார்களோ என்ற சந்தேகமும், அவர்கள் கள்வர்களோ அல்லது வேறு யாரோ என்ற சந்தேகமும் எழுந்து