பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பூர்ணசந்திரோதயம்-1 உடனே இளவரசர், "அடேய்! நீ செய்யும் உதவியை நான் எப்போதும் மறக்கமாட்டேன். இவள் யார் என்பதையும், எங்கே இருப்பவள் என்பதையும் என்ன கருத்தோடு என்னை இங்கே வரவழைத்தாள் என்பதையும் நீ வெளியிடுவாயானால் நான் உனக்கு பதினாயிரம் ரூபாய் இனாம் தருகிறேன். அது போதாவிட்டால் பதினைந்தாயிரம் வேண்டுமானாலும் தருகிறேன்' என்றார். கட்டாரி, "மகாராஜா பதினைந்தாயிரம் கொடுத்தால் இவர் அதற்கு இரட்டித் தொகையான முப்பதாயிரம் ரூபாய் கொடுக்கத் தயாராக இருப்பாள். ஆகையால், உங்களிடத்தில் நான் ஒப்பந்தம் செய்துகொள்வதைவிட இவளிடத்தில் ஒப்பந்தம் செய்துகொள்வதே லாபமானது. ஆகையால், என்னுடைய வாயிலிருந்து நீங்கள் ஒரு வார்த்தைகூட வருவிக்க முடியாது. நீங்கள் மகாராஜாவாயிற்றே என்கிற மரியாதைக்காக நான் இவ்வளவுதூரம் பொறுத்து உங்களிடத்தில் பேசினேன். இனி நான் பலவந்தமாக உங்களை அழைத்துப் போகும் படியாக இருக்கும். அப்படிப்பட்ட இழிவான காரியத்தில் நான் இறங்காமல் மகாராஜா தயவுசெய்து தாமாகவே மரியாதை யாக நடந்து வெளியில் வரவேண்டும். இது உறுதியான வார்த்தை நடவுங்கள்' என்று கண்டித்து நிர்த்தாrண்யமாகப் பேசினான். அதற்குமேல் இளவரசர் வாய் திறந்து பேசாமல், அந்த மேன்மாடத்தை விட்டுக் கீழே இறங்கலானார். இரண்டொரு நிமிஷ நேரத்தில் கட்டாரித்தேவனும் இளவரசரும் படிகளை விட்டிறங்கி மருங்காபுரி ஜெமீந்தார் முதலியோர் இருந்த இருட்டறைக்கு வந்து சேர்ந்தனர். கட்டாரித் தேவனும் மற்ற முரட்டு மனிதரும் இளவரசர் முதலிய நால் வரையும் அழைத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியிலே வந்து அவ்விடத்தில் ஆயத்தமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்டி வண்டிக்குள் முன்போல அவர்கள் நால் வரையும்