பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 151 தோற்றுவித்த முகத்தினளாய்க் குலுங்கக் குலுங்க நகைத்து, 'அடி தையனாயகீ! எல்லாச் சங்கதியையும் கேட்டுக் கொண்டிருந்தாயல்லவா? எப்படி இருக்கிறது நாடகம்?' என்று வேடிக்கையாகக் கேட்ட வண்ணம் பக்கத்தில் இருந்த ஒரு லோபாவின் மீது சயனித்துக் கொண்டாள். உடனே அந்தப் பணிப்பெண் தனது எஜமானியின் கால்பக்கத்தில் ஸோபாவின் மீது உட்கார்ந்து, "நான் எல்லாச் சங்கதியையும் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். ஆள் சுத்தப் பெட்டை மோகினி பிடித்தவன்போல இருக்கிறான். இவன் போய் ஏதோ செய்து விடுவதாகப் பயமுறுத்தி விட்டுப் போயிருக்கிறான். போகட்டும் போகட்டும் என்று கூறிய வண்ணம் தனது எஜமானியின் காலைத் தொட்டு அன்பாக வருடத் தொடங்கினாள். அவர்கள் அங்ங்னம் இருக்க, அந்த மாளிகையை விட்டு வெளிப்பட்ட கலியாணபுரம் மிட்டாதார்.தமது மனதில் பொங்கி யெழுந்த ஆத்திரத்தையும், பதைப்பையும், துக்கத்தையும் அடக்கிக் கொண்டவராய் ராஜபாட்டையை அடைந்து, இப்புறமும் அப்புறமும் திரும்பித் திரும்பிப் பார்த்து, அவ்விடத்தில் ஏதாவது வாடகை வண்டி அகப்படுமோ வென்பதை கவனித்ததன்றி, தாம் எங்கே போகிறதென்று தீர்மானம் செய்யமாட்டாமல் தடுமாறி நின்ற சமயத்தில், எதிர்ப்பக்கத்திலிருந்த சத்திரத்திற்குள்ளிருந்து வெளிப்பட்ட ஒரு மனிதன், 'எஜமானுக்கு என்ன வேண்டும் யாரைப் பார்க்கிறீர்கள்?' என்று பணிவாகக் கேட்டுக்கொண்டு மிகவும் அடக்க வொடுக்கமாக அவரண்டை நெருங்கினான். அந்தக் குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்த கலியான புரம் மிட்டாதார் திடுக்கிட்டு, 'ஓகோ பஞ்சண்ணாராவா? என்ன சமாசாரம் இங்கே சத்திரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று வினவினார்.