பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூர்ணசந்திரோதயம் 1-வது அதிகாரம் கலையோ, பிணையோ, கவினார் மடமயிலோ! தஞ்சைமாநகரை மகாராஷ்டிரஅரசர்கள்ஆண்டு அரசு புரிந்த காலத்தில், 1812-ம் வருஷத்தில் நமது கதை ஆரம்பமாகிறது. அப்போது, திருவாரூரிலிருந்து நாகைப்பட்டணத்திற்குச் சென்ற ராஜபாட்டையின் ஒரத்தில் ஒர் அழகான மாளிகை இருந்தது. அதைச் சுற்றிலும் பூச்செடிகளும், பழமரங்களும் நிறைந்த ஒரு தோட்டமிருந்தது. அந்தத் தோட்டத்தின் நாற் புறங்களிலும் சவுக்கு, மருதாணி முதலியவற்றாலான உயர்ந்த கனமான வேலியிருந்தது. அந்த அதியலங்காரமான பூஞ்சோலைக்குள் எப்போது பார்த்தாலும் மரங்களில் பழங்கள் குலுங்கி மாதுரியமான மணத்தை நெடுந்துரம் வரையில் வீசிக்கொண்டிருக்கும். அதுபோலவே, மிகவும் சொகுலாகவும், அழகாகவும் வைத்து வளர்க்கப்பட்டிருந்த மல்லிகை, ஜாதி, ரோஜா, செண்பகம், இருவாட்சி, சம்பங்கி முதலியவற்றின் செடிகொடிகளில் சப்த நிறங்களைக் கொண்ட பூக்களேமயமாக நிறைந்து, தரையின்மீது ஒரு சாணுயரம் வீழ்ந்து மெத்தை பரப்பப்பெற்றது போலக் காணப்பட்டு, அந்தராஜபாட்டையின் வழியாகச் செல்லும் பிரயாணிகள் அவற்றினால் கவரப்பட்டு அவ்விடத்தில் சிறிது நேரமாகிலும் மயங்கி ஆனந்த பரவசமுற்று நின்ற பின்னரே போகும்படி செய்தன. அப்படிப்பட்ட அதிமனோக்கியமான உத்தியான வனத்திற்குள், காலை மாலை நேரங்களில், மடமயில் போலவும், பேடன்னம் போலவும் பிரகாசித்த மகாவசீகரமான வனப்பு வாய்ந்த இரண்டு மடந்தையர் காணப்பட்டு, அந்த பூ.சி.1-2