பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பூர்ணசந்திரோதயம்-1 வெளிப்படையாகக் கடிதத்தில் எழுத எனக்கு இஷ்டமில்லை. ஆகையால், நான் நாளையதினம் மத்தியானம் மூன்று மணிக்குத் தங்களுடைய அரண்மனைக்கு வர உத்தேசிக்கிறேன். இந்த ஏழையின்மேல் தயை கூர்ந்து எஜமானவர்கள் எனக்குத்தரிசனம் கொடுத்து என்னுடைய கோரிக்கையையும் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டுமாய்ப் பிரார்த்திக்கிறேன். - இங்ங்னம் அந்தரங்க சிநேகிதை அம்மணிபாயி. - என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்த ஜெமீந்தார் மிகுந்த குதுகல மடைந்தவராய், 'பேஷ்! பலே! இன்றைய தினம், எதிர்பார்க்கக்கூடாத மனிதர்களெல்லாரும் வருகிறார் கள்! நான் இன்று முழுதும் வெளியில் போகாமல் இங்கே இருந்தது நிரம்பவும் அநுகூலமாகப் போய்விட்டது. ஆனால், இந்த அம்மணிபாயி என்னிடத்தில் பணம் கடன் வாங்கத்தான் வருகிறாள் என்பது நிச்சயம். அவள் எப்போதாவது திருப்பிக் கொடுக்கிறவளாக இருந்தாலல்லவா அதைக் கடன் என்று சொல்லலாம். அவள் என்னிடத்தில் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு போய்ச் சரியாக இரண்டுமாச காலம் ஆகவில்லை; மறுபடியும் கடன்கேட்க வருகிறாள் போல இருக்கிறது. அந்த ஆயிரம் ரூபாயைத் திருப்பிக் கொடுத்துவிட்டு போக அவள் ஒருகால் வருகிறாளோ என்று சந்தேகிப்பதற்குக் கூட இடமில்லை; ஏதோ அவசரமான ஒரு காரியம் என்னால் ஆக வேண்டுமென்று அவள் நன்றாக எழுதியிருக்கிறாள். அழகான பெண் பிள்ளை களுக்குக் கணக்கில்லாமல் கடன் கொடுக்க என்னைப் போன்ற மருங்காபுரி ஜெமீந்தார் இருக்கையில் அம் மணிபாயி போன்றவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டந்தான்' என்று தமக்குள் சிந்தித்துக் கொண்டவராய் , மிகுதியிருந்த கடிதங்களை யெல்லாம் ஒன்றன்பின் னொன்றாகப் படித்து முடித்தார். அவைகள் நமது கதைக் குச் சம்பந்தமற்றவை ஆகையால்,