பக்கம்:பூர்ண சந்திரோதயம்-1.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 201 அந்தச்சமாதானத்தைக் கேட்ட மருங்காபுரி ஜெமீந்தார்.தமது கோபத்தை ஒருவாறு அடக்கிக் கொண்டவராய், அவன் வேண்டுமென்றே அவ்வாறு செய்யவில்லை என்று உறுதி செய்து கொண்டார். உடனே கலியாணராமன் அந்தப் பிஸ்டலை முன்னிருந்த இடத்தில் வைத்து, பூச்செண்டினால் முன்போல அதை மறைத்தான். அதே காலத்தில் ஜெமீந்தார் தாம் எடுத்து வந்த நோட்டுகளை அவனுக்கு எதிரில் வைத்து, "இதோ இருக்கிறது நீ கேட்ட இரண்டாயிரம் ரூபாய். எடுத்துக்கொள். செட்டிமாரிடத்தில் போய்க் கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகும்' என்று குத்தலாக மொழிந்தார். அவரது உட்கருத்தை சரியானபடி உணராதவன்போல சாந்தமாகக் காணப்பட்ட கலியாணராமன், அந்த நோட்டுக் கற்றையை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டவனாய், “சரி: நான் இப்படி அடிக்கடி இங்கே வந்து உங்களுக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பது என் மனசுக்கே சங்கடமாக இருக்கிறது. இனிமேலாவது உங்களுக்கு இப்படிப்பட்ட தொந்தரவு இல்லாமல் போகும்படி என்னால் கூடியவரையில் முயற்சிக்கிறேன். உங்களுக்கு எவ்வளவோ அலுவல் இருக்கும். நான் உத்தரவு வாங்கிக் கொள்ளுகிறேன்' என்று கூற, அவர் மிகவும் முறுக்காகவும் அலட்சியமாகவும் அவனுக்கு உத்தரவு கொடுக்க அவன் அவ்விடத்தை விட்டு வெளியில் சென்றான். அதன்பிறகு ஜெமீந்தார் தமது பகற்போஜனத்தை அவ்விடத்திற்கே வரவழைத்து விரைவாக உண்டபின் எழுந்து, முன்பக்கத்திற்குச் சென்று பார்த்தார். அடுத்த பங்களாவிற்கு எதிரில் ராஜபாட்டையில் கண்ணில்லாக் கபோதி போல வேஷம்போட்டு உட்கார்ந்து பிச்சை வாங்கிக் கொண்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்போதும் அவ்விடத்திலேயே இருந்ததை ஜெமீந்தார் கண்டு மிகுந்த மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்தார். அந்த இன்ஸ்பெக்டர் அபாரமான வல்லமை வாய்ந்தவர் என்றும், அந்தத் திருடன் வரும் பrத்தில்